திருச்சிராப்பள்ளி, ஜூன் 2 திருச்சி மாவட்ட மலை வாழ் மக்களுக்காக அரசு சார் பில் நடமாடும் மருத்துவ வாக னத்தை பார்க்கவன் தொண்டு நிறுவனத்திடம் மாவட்ட ஆட் சியர் ஜெய ஸ்ரீ முரளிதரன் வழங்கினார். தமிழக அரசு மலைவாழ் மக்களின் மருத்துவ வசதிக் காக ரூபாய் 7.5 லட்சம் மதிப் பீட்டில் மலைப்பகுதியில் எளி தில் செல்லக்கூடிய நடமாடும் மருத்துவ வாகனத்தை திருச்சி மாவட்டத்திற்கு வழங்கியுள் ளது. ஏற்கனவே திருச்சி மாவட்ட நிர்வாகமும் பார்க்க வன் தொண்டு நிறுவனமும் இணைந்து மலைவாழ் மக்களுக்காக மருத்துவ சேவையை கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் துறையூர் தாலுகா, பச்சமலை பகுதியில் அளித்து வருகின்றன.அதன்படி இச்சேவையை மேலும் மேம்படுத்துவதற்காக, இவ்வாகனம் பார்க்கவன் தொண்டு நிறுவனத்திற்கு அளிக்கப் பட்டு, அவர்கள் மேற்பார்வை யில் துறையூர் தாலுகா, பச்ச மலை பகுதிகளில் உள்ள 28 ஊராட்சிகள் 42 குக்கிராமங் களை உள்ளடக்கி, தலா 1 மருத் துவர், செவிலியர், ஆய்வக ஆய்வாளர் மற்றும் ஓட்டுநர் ஆகியோரை கொண்டு தினம்தோறும் (ஞாயிறு தவிர) ஒரு கிராமம் வீதம் மருத்துவ சேவை அளிக்கப்பட உள்ளது.இவ்வாகனத்தில் உள்ள மருத்துவக் குழுவை கொண்டு சாதாரண சிகிச்சை முதல் பிர சவம் உள்ளிட்ட அனைத்து சிகிச்சையும் அளிக்கப்படும். மேலும், உயர்தர சிகிச்சைக் கும் மருத்துவ குழு பரிந்துரை செய்யும். போக்குவரத்து வசதி இல்லாத, வாகனங்கள் எளி தில் செல்ல இயலாத பாதை யில் செல்லும் வகையில், இவ் வாகனம் வடிவமைக்கப்பட் டுள்ளது. துறையூர் தாலுகா, செம்புலிச்சான்பட்டி மற்றும் டி. செங்காட்டுப்பட்டியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தி லிருந்து இவ்வாகனம் மருத் துவ சேவை புரியும்.

Leave A Reply