டென்னிஸ் கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரான்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டிகள் பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இப்போட்டிகளின் மூன்றாவது சுற்று போட்டியில் உலகின் முதல்நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிக், பிரான்ஸ் நாட்டின் நிக்கோலசை எதிர்த்து மோதினார். இதில் துவக்கம் முதலே அதிரடியாக விளையாடிய ஜோகோவிக் 6-1, 6-2, 6-2 என்ற நேர்செட் கணக்கில் நிக்கோலசை தோற்கடித்து நான்காவது சுற்றுக்கு முன்னேறினார். இதேபோல், பிரான்ஸ் நாட்டின் டிசோன்கா, செக்குடியரசின் தாமஸ் பெர்டிச், சுவிட்சர்லாந்தின்வாவெர்னிகா,அர்ஜென்டினாவின் டெல்போட்ரோ ஆகியோரும் மூன்றாவது சுற்றில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினர். மகளில் ஒற்றையர் பிரிவில் பெலாரஸ் நாட்டின் விக்டோரியா அசரென்கா, ஆஸ்திரேலியா நாட்டின் சமந்தா மற்றும் ரஷ்யா நாட்டின் குஸ்னெட்சோவா ஆகியோர் மூன்றாவது சுற்றில் வெற்றி பெற்று நான்காவது சுற்றுக்கு சென்றனர்.

Leave A Reply

%d bloggers like this: