கோவை, ஜூன் 2-கோவையில் பள்ளி வாகனத்தில் அனுமதிக்கப்பட்ட இருக்கைகளுக்கு மேல் மாணவர்களை ஏற்றிச் சென்றால் அந்த பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை சரக போக்குவரத்து துணை ஆணையர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்;அனைத்து பள்ளி வாகனங்களின் முன்புறமும், பின் புறமும் பள்ளி வாகனம் என்று பெரிதாக எழுதப்பட்டிருக்க வேண்டும். பள்ளி நிர்வாகம் வாடகை வாகனத்தை பள்ளி வாகனமாக பயன்படுத்தினால் பள்ளி பணிக்காக என்ற பலகை பார்ப்பதற்கும், படிப்பதற்கும் ஏதுவாக இருக்க வேண்டும். அனுமதிக்கப்பட்ட இருக்கைகளுக்கு மேல் அதிகமாக பள்ளி மாணர்களை ஏற்றிச் செல்லக்கூடாது. வாகனங்களில் உரிய மருந்துகள், முதலுதவி பெட்டிகள், தீயணைப்பு கருவிகள் கட்டாயமாக வைத்திருக்க வேண்டும். மேலும் பேருந்துகளில் பக்கவாட்டு ஜன்னல்களில் மாணவர்களின் பாதுகாப்புக்காக கிரில் பொறுத்த வேண்டும். பேருந்துகளில் பள்ளியின் ஆசிரியர் ஒருவர் குழந்தைகளின் பாதுகாப்புக்காக உடன் செல்ல வேண்டும் என்பது உள்ளிட்ட விதிமுறைகள் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின் பேரில் அந்தந்த பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: