கடைகளில் உடனடியாக கிடைக்கும் உணவுப்பொருட்களை அதிகம் பயன்படுத்துவதால் நீரிழிவு, இதய நோய் போன்ற பாதிப்புகள் அதிகம் ஏற்படுகின்றன என பல மருத்துவ ஆய்வாளர்கள் உறுதிசெய்துள்ளனர்.பர்கர், பேல்பூரி, பானி பூரி, கட்லட் போன்ற உடனடி உணவு வகைகளில் அதிக அளவில் சோடியம் உப்பு சேர்க்கப்பட்டிருக்கும். இதனால் உடலில் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இத்தகைய உணவுப்பொருட்களில் இரத்தத்தில் கெட்ட கொழுப்பை அதிகரிக்கும் டிரான்ஸ்ஃபேட் என்ற பொருள் அதிக அளவில் காணப்படுகிறது.
பர்கர் பன், குளிர்பானங்கள், கெச்சப் போன்ற பல உணவுகளில் இனிப்பு சுவைக்காக சேர்க்கப்படுகிற பிரதான பொருள் ஹைஃப்ரக்டோஸ் கார்ன் சிரப். இது உணவுக்கு ஒரு வித கவர்ச்சியான பிரவுன் நிறத்தையும் கொடுக்கக்கூடியது. இது, அதிகம் சாப்பிடத் தூண்டி, இதய நோய்களையும் நீரிழிவு நோய்களையும் நீரிழிவையும் வரவழைக்கக் கூடியது. உடனடி உணவுகள் கெட்டுப்போகாமல் இருக்கவும், பாக்டீரியா வளராமல் இருக்கவும் சேர்க்கப்படும் ரசாயன பிரிசர்வேடிவ் ஆபத்தானது. உப்பு, சர்க்கரை, வினிகர் மாதிரியான இயற்கையான பிரிசர்வேட்டிவ்களால் பெரிய பாதிப்பு கிடையாது. ரசாயன பொருட்களான சோடியம் பென்ஸோயட் ஊறுகாய், ஜூஸ் வகையறாக்களில் சேர்க்கப்படுவதால் இது அலர்ஜியை உருவாக்கி மூளையையும் பாதிக்கலாம். உடனடியாக சாப்பிடக் கூடிய அசைவ உணவுவகைகளில் நைட்ரேட், நைட்ரைட்டஸ் சேர்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து சாப்பிடும் போது வயிறு மற்றும் சிறுநீர்ப்பை புற்றுநோயை வரவழைக்கக் கூடிய அளவுக்கு இது மோசமானது. ஏற்கனவே அசைவ உணவுகளில் உள்ள கொழுப்பு, அதைக்கெடாம வச்சிருக்கிறதுக்காக சேர்க்கிற இன்னொரு கொழுப்புன்னு ரெண்டுமே கெடுதல்தான் என்றும் அவர்கள் எச்சரிக்கின்றனர்.

Leave A Reply