மாஸ்கோ,ஜூன் 2-பகவத் கீதையை ரஷ்யாவில் மொழிமாற்றம் செய்து வெளியிடுவதைத் தடை செய்வது தொடர்பான வழக்கில் மேல்முறையீடு செய்வ தில்லை என்று ரஷ்ய அரசு முடிவு செய்துள் ளது. சர்வதேச அளவில் இந்துக்களின் எதிர்ப் பையும், இந்தியாவுடனான நல்லுறவையும் கருத்தில் கொண்டு ரஷ்ய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. முன்னதாக பகவத் கீதையின் மொழிபெயர்ப்பு சமூக அமைப்பில் பிளவை ஏற் படுத்தும் வகையில் இருப்பதால், அதனை ரஷ் யாவில் மொழிமாற்றம் செய்து வெளியிடுவதைத் தடுக்க வேண்டுமென ரஷ்யாவில் உள்ள பழ மைவாத கிறிஸ்தவ அமைப்பு நீதிமன்றத்தில் கோரியிருந்தது. ஆனால் அதனை ஏற்க நீதிமன்றம் மறுத்து விட்டது. மேல்முறையீட்டிலும் பகவத் கீதைக்கு தடைவிதிக்க மறுக்கப்பட்டதால், பரபரப்பு அடங்கியது. எனினும் இது தொடர்பாக மீண்டும் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. எனினும் இந்த வழக்கை தொடர்ந்து நடத்தப்போவதில்லை என்று அரசுத் தரப்பு முடிவு செய்துள்ளது.

Leave A Reply