சந்தை என்று வந்துவிட்டால் அதில் கள்ளச் சந்தை என்பதும் வந்துவிடும். கல்விச் சேவை ஒரு முழு வணிகமாக மாற்றப்பட்டு வரும் நிலையில் இதிலேயும் வெளிநாட்டு நிறு வனங்களின் கள்ளத்தனமான ஊடுறுவல் நடந்துவருகிறது. இதைக் கண்டுபிடித்துத் தடுப்பதுதானே அரசின் கடமை என்று யாரா வது கேட்டால், அது அப்பாவித்தனமான கேள்வியாகவே இருக்கும். ஏனென்றால், வரவு செலவுக் கணக்கில் எப்படித் தில்லு முல்லு செய்தால் வரி செலுத்துவதைத் தவிர்க்க லாம் என்று வணிகவரித்துறையின் சில சுய நல அதிகாரிகளே சொல்லிக்கொடுப்பது போல, வெளிநாட்டு நிறுவனங்களின் கள்ளத்தன மான வருகைக்கு வாசல் திறந்துவிடுவதே மத்திய அரசுதான்!வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்கள் நாட்டுக்குள் நேரடியாக வருவதை முறைப்படுத்தும் சட்ட முன்வரைவு ஒன்றுநாடாளுமன்றமாநிலங்களவையில்காத் திருக்கிறது. இடதுசாரிக் கட்சிகள், பாஜக உள் ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்துவரும் நிலையில் மாநிலங்களவை யில் அது நிறைவேறுவதற்கான வாய்ப்பு இல்லை என்பது தெளிவாகிவிட்டது. ஆகவே, மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் தற்போதுள்ள நடைமுறை களிலேயே சில திருகுதாளங்களைச் செய்து, வெளிநாட்டுக் கல்வி வியாபார நிறுவனங்கள் தடையின்றி நுழைவதற்கான ஏற்பாடுகளைச் செய்வது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறது என்று ஒரு செய்தி சொல்கிறது.புதிய சட்டம் கொண்டுவராமலே, தற்போ துள்ள சட்டங்களிலேயே வெளிநாட்டு கல்வி வியாபார நிறுவனங்கள் நுழைவதற்கு என் னென்ன வாய்ப்புகள் இருக்கின்றன என்ப தைக் கண்டறிந்து சொல்லுமாறு பல்கலைக் கழக நிதி மானியக் குழுவை (யுஜிசி) அமைச் சகம் வற்புறுத்தி வருவதாக அந்தச் செய்தி தெரி விக்கிறது.
யுஜிசி சட்டத்தின் (1956) 3வது பிரி வின் கீழ் நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள் தொடங்க முடியும். அப்படிப்பட்ட நிகர் நிலைப் பல்கலைக்கழகங்கள் என்ற பெயரில் வெளிநாட்டு நிறுவனங்களை வரவிட முடி யுமா என்று அமைச்சகம் கேட்டிருக்கிறதாம். அதே போல் பல்கலைக்கழகங்களுக்கான மாநி லச் சட்டங்களின் கீழ், தனியார் பல்கலைக் கழகங்கள் என்ற பெயரில் நுழைய விடலாமா என்றும் அமைச்சகம் கேட்டிருக்கிறதாம்.இன்னொரு உத்தியாக, இரட்டைப் படிப் புத் திட்டங்கள், கூட்டுப் பட்டத் திட்டங்கள் என்ற பெயர்களில் வெளிநாட்டு நிறுவனங் களுடன் உள்நாட்டு நிறுவனங்கள்உடன்பாடு செய்து கொள்வதை “முறைப்படுத்தும்” (?) முயற்சியில் யுஜிசி இறங்கியுள்ளதாகவும் அந்தச் செய்தி கூறுகிறது. மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் இந்த மாதம் அமெ ரிக்கா செல்ல இருக்கிறார். கல்வித்துறை “ஒத்துழைப்பு” தொடர்பான புதிய ஒப்பந்தங் களில் அவர் கையெழுத்திடப் போகிறாராம். அப்போது இந்தப் புதிய திட்டங்கள் பற்றி அங்கே அறிவிக்கத் திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. அதற்கு முன்பாக யுஜிசி தனது முடிவைச் சொல்லுமாறு கட்டாயப்படுத் தப்பட்டதாம். பொதுவாக யுஜிசி சிறப்புக் கூட்டங்களை ஆறு வாரங்களுக்கு ஒரு முறை அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒரு முறைதான் நடத்தும். ஒரு கூட்டம் நடத்தப் படுவதற்கு முன்பாக அதில் விவாதிக்கப் படும் பொருள் குறித்த தகவல்கள் எழுத்துப் பூர்வமாக உறுப்பினர்களுக்குத் தெரிவிக்கப் படும். அந்த நடைமுறையின் கீழ், ஏற்கெனவே திட்டமிட்டபடி ஜூலை 21 அன்று யுஜிசி கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. இப் போது, கபில் சிபல் அமெரிக்காவுக்குப் புறப் படுவதற்கு முன்பாகக் கூட்டத்தை நடத்தக் கட்டாயப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, கூட் டம் முன்கூட்டியே கூட்டப்பட்டு, சனிக் கிழமையன்று (ஜூன் 2) அந்தக் கூட்டம் நடந் துள்ளது. அது மட்டுமல்ல, கூட்டத்தின் விவா தப் பொருள் என்ன என்ற எழுத்துப்பூர்வ தக வல் எதுவும் யுஜிசி உறுப்பினர்களுக்கு அளிக் கப்படவில்லையாம். வாய்மொழியாக, வெளி நாட்டு நிறுவனங்களை அனுமதிப்பது தொடர் பாக ஒரு அவசர விவாதம் என்று சொல்லப் பட்டதாம். குழு உறுப்பினர்கள் இதில் மிகவும் அதிருப்தியுடன் இருந்திருக்கிறார்கள். அவர்கள் எப்படி சரிக்கட்டப்பட்டார்கள், என்ன மாற்று வழிகள் கண்டுபிடிக்கப்பட்டன என்பதெல்லாம் இனிமேல்தான் வெளிவர வேண்டும்.ஏதோ இனிமேல்தான் வெளிநாட்டு கல்வி நிறுவனங்கள் இந்தியாவுக்குள் காலடி வைக்கப்போவதாக எண்ணிவிட வேண்டாம். இப்படியொரு கல்விச் சந்தைக்கான அவசரக் கூட்டம் ஒன்று நடக்க இருப்பதைக் கண்டு பிடித்து அம்பலப்படுத்தியுள்ள ‘தி ஹிந்து’ நாளேடு (1-6-2012), இன்னொரு தகவலையும் தெரிவித்துள்ளது. அது என்னவென்றால், தற்போது உள்ள யுஜிசி சட்டவிதிகளின் கீழும், மாநிலப் பல்கலைக்கழகச் சட்டங்களின் கீழும் ஏற்கெனவே பல வெளிநாட்டு நிறுவனங்கள் நுழைந்துவிட்டன. 2010ம் ஆண்டு நிலவரப் படி இந்தியாவில் நுழைந்துள்ள வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை 631. இவற்றில் 440 நிறுவனங்கள் அந்தந்த நாடு களிலிருந்தே செயல்படுகின்றன. 5 நிறு வனங்கள் இந்தியாவில் தங்களது சொந்த வளாகங்களை அமைத்துள்ளன. 60 நிறு வனங்கள் இங்குள்ள நிறுவனங்களோடு ஒத் துழைப்பு உடன்பாடுகளைச் செய்துள்ளன. 49 நிறுவனங்கள் இரட்டைப் படிப்புத் திட்டத்தின் கீழும் 77 நிறுவனங்கள் வேறு சில திட்டங் களின் கீழும் செயல்படுகின்றன.நாட்டின் உயர்கல்வித் துறை உலகத் தரத்திற்கு உயர்த்தப்படும் என்று ஆட்சியா ளர்கள் சொல்லிவந்திருக்கிறார்கள். பல்வேறு நாடுகளில் செயல்படுகிற கல்வி நிறுவனங் களின் சிறப்பான அம்சங்கள் இந்தியப் பல் கலைக்கழகங்களிலும் கொண்டுவரப்படும், இந்தியக் கல்வி அமைப்புகள் கூடுதல் நிதி, போதிய ஆசிரியர்கள், நவீன தொழில்நுட்பங் கள் என்ற ஏற்பாடுகளுடன் வலுப்படுத்தப் படும் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது. மன் மோகன் சிங் அரசோ, உலகத் தரம் என்றால் வெளிநாட்டு நிறுவனங்களிடமே உள்நாட்டுக் கல்வித் துறையைத் தாரை வார்ப்பது என்ற புதிய அர்த்தத்தை எழுதுகிறது.பிரதமரும் அமைச்சர்களும் வெளிநாடு களுக்குச் சென்றுவரும்போது கல்வி ஒத்து ழைப்புக்கான உடன்பாடுகளில் கையெழுத் திட்டதாக செய்தி சொல்லப்படும்.
அந்த உடன்பாடுகள் உண்மையில் இந்தியாவின் சொந்தக் கல்வி வழங்கல் வலிமையை அழிப் பதற்கான நிர்ப்பந்தங்கள்தான் என்பது இப் போது புரிகிறது.“எங்கள் நாட்டிற்கு வாருங்கள்… நவீன கல்வியைப் பெறுங்கள்” என்று பல்வேறு நாடு களின் பல்கலைக்கழகங்கள் சார்பில் விளம் பரங்கள், அந்தக் கல்வி நிறுவனங்களின் சார் பில் கண்காட்சிகள், உள்நாட்டுக் கல்வி நிறு வனங்களோடு இணைந்து உயர்கல்வி குறித்து சிறப்புக் கருத்தரங்குகள், அந்த நாடுகளின் கல்வி நிலையங்களில் வெளி நாட்டு மாணவர்களுக்குச் செய்யப்பட்டுள்ள வசதிகள் பற்றிய செய்தியாளர் சந்திப்புகள்… ஒவ்வொரு கல்வியாண்டு தொடங்கும் போதும் இவையெல்லாம் சர்வசாதாரணமாகி விட்டன. அதன் பின்னணியில் இப்படிப்பட்ட அசாதாரண திரைமறைவு உத்திகள் இருக் கின்றன.

Leave A Reply

%d bloggers like this: