சென்னை, ஜூன் 2 -தூத்துக்குடி மாவட்டம் தெய்வச் செயல்புரத்தில் நடந்த நிலமோசடி தொடர்பான விசாரணை குறித்து தமிழக முதலமைச்சருக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், கடந்த மே 28ம்தேதி ஒரு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத் தில் கூறப்பட்டுள்ள விவரம் வருமாறு:10.5.2012 அன்று தமிழ்நாடு சட்டப் பேரவையில் தூத்துக்குடியிலும், கோவில்பட்டியிலும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி நிர்வாகிகளின் வீடுகளில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்ப வம் குறித்து, மார்க்சிஸ்ட் கட்சி சட்ட மன்ற உறுப்பினர்கள் கொண்டு வந்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதிலளித்ததோடு, இந்தத் தாக்குதல்கள் குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு தாங் கள் உத்தரவிட்டுள்ளதை வரவேற்கிறோம்.அதேசமயம், சில அம்சங்களில் அதிகாரிகள் முழுமையான விவரங் களை தங்கள் கவனத்திற்கு கொண்டு வரவில்லையோ என ஐயுறுகிறோம். எனவே கீழ்க்கண்ட விவரங்களை தங் களது கவனத்திற்கு உரிய நடவடிக் கைக்காக முன்வைக்க விரும்புகிறோம்.கவனஈர்ப்புத் தீர்மானத்தின் மீது தாங்கள் பதிலளித்த போது “தூத்துக்குடி மாவட்டம், தெய்வச் செயல்புரம் பகுதி யில் சீவலப்பேரி சத்திரத்திற்கு சொந்த மான நிலங்களை கிராமவாசிகளே பல வருடங்களாக அனுபவித்து வந்துள் ளனர்.
சீவலப்பேரி சத்திரம் சார்பாக மேடைத்தளவாய் திருமலையப்ப முதலி யார் என்பவர் சத்திரத்திற்குச் சொந்த மான நிலங்களை பேச்சிமுத்து மற்றும் ஆறு நபர்களுக்கு கிரயம் கொடுத்துள் ளார்” என விளக்கம் அளித்துள்ளீர்கள்.மேற்கண்ட மேடைத்தளவாய் திரு மலையப்ப முதலியார் பேச்சிமுத்து மற்றும் ஆறு நபர்களுக்கு கிரயம் செய்து கொடுத்த தெய்வச் செயல்புரத்தில் உள்ள நிலம் மேடைத் தளவாய்க்கு சொந்தமான நிலங்கள் அல்ல. அவை தெய்வச் செயல்புரம் விவசாயிகளுக்கு சொந்தமான நிலங்கள் என்பதை தங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்பு கிறோம். விவசாயிகளிடம் 1884 முதல் இதற்கான ஆவணங்கள் உள்ளன.மேடைத் தளவாய் திருமலையப்ப முதலியார் அவர்கள் எழுதிக் கொடுத் துள்ள கிரயப்பத்திரங்களில் உச்ச நீதி மன்ற தீர்ப்பு சிவில் அப்பீல் 12090, 12091/1996ஐ மேற்கோள் காட்டி மேற்படி நிலத் தை விற்க தனக்கு அதிகாரமிருப்பதாக கூறியிருக்கிறார். ஆனால் அவர் குறிப் பிடும் உச்சநீதிமன்றத் தீர்ப்பில் தெய்வச் செயல்புரத்தில் உள்ள நிலம் அவர்களுக் குச் சொந்தமானது என்று குறிப்பிடப்பட வில்லை. இது குறித்து திருநெல்வேலி யில் உள்ள இணை ஆணையர் (நிலச் சீர்திருத்தம்) அவர்கள் உச்சநீதிமன்றத் தீர்ப்பு தெய்வச் செயல்புரம் நிலம் சம்பந் தப்பட்டதோ, தொடர்புடையதோ அல்ல என்று எங்கள் கட்சி எழுப்பிய கேள் விக்கு விளக்கமளித்து எழுதிய கடிதத் தில் குறிப்பிட்டுள்ளார். தனக்கு சொந்த மில்லாத நிலத்தை பேச்சி முத்து மற்றும் ஆறு நபர்களுக்கு கிரயம் செய்து கொடுத்திருப்பது மோசடிக் கிரயம் என் பதை தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறோம். தமிழகத்தில் சமீப காலத் தில் நடைபெற்றுள்ள பெரும்பாலான நில அபகரிப்பு இத்தகைய மோசடியான விற்பனைகள் மூலமே நடைபெற்றிருக் கிறது. நில அபகரிப்புகள் மீது நடவடிக் கை எடுத்துள்ள தங்கள் அரசு இந்த மோசடி விற்பனையின் மீதும் நடவடிக் கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.மேலும் இப்பிரச்சனையில் சம்பந் தப்பட்டுள்ள செல்வம் திமுகவின் மாநி லப் பொதுக்குழு உறுப்பினர். அவரது சகோதரர் ப. சண்முகவேல் அதிமுக வின் தூத்துக்குடி ஒன்றியச் செயலாளர். இன்னொரு சகோதரர் தேமுதிகவின் மாவட்ட நிர்வாகியாக இருப்பதாக சொல் லப்படுகிறது. நிலக் கிரயம் பெற்றவர் களில் இருவர் செல்வத்தின் சகோதரர் கள். மீதி ஐவரும் அவருடைய கார் ஓட்டு நர் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் ஊழியர்கள். பண பலம் மற்றும் அரசியல் செல்வாக்கால் இப்பிரச்சனையில் இவர்கள் மீது முறையான விசாரணை நடைபெறவிடாமல் தடுத்துக் கொண்டி ருக்கின்றனர்.மோசடிக் கிரயம் பெற்றவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் பட்டா வழங்க மறுத்து விட்டது. ஆனால் அதிகாரிகள் சிலரது துணையுடன் பட்டா மோசடியாக வழங் கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் (இன்றைய சட்டமன்ற கொறடா) தோழர் கே.பாலகிருஷ்ணன் அவர்கள் தலை மையில் நடைபெற்ற போராட்டத்திற்குப் பிறகு தூத்துக்குடி சார் ஆட்சியர் தனது நடைமுறைகள் ஆ1/1930/2003 நாள்: 3.8.2009 மூலம் மேற்படி பட்டாக்களை ரத்து செய்து விட்டார். இதன் மீது எதிரி கள் இடைக்காலத் தடைபெற்றுள்ளனர்.
இப்போது மாவட்ட நிர்வாகம் பட்டா வழங் கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக் கவும், நீதிமன்ற தடையாணையை நீக்க வும் முயற்சிகள் மேற்கொண்டுள்ளது.இந்நிலையில் 2010 ஆம் ஆண்டு பெய்த மழையால் பாதிக்கப்பட்ட விவ சாயிகளுக்கு பயிர்ச்சேத நிவாரணம் வழங்கப்பட்டது. செல்வம் தனது 3.1.2011 தேதியிட்ட கடிதத்தின் மூலம் கிரயம் பெற்ற 7 பேர் சார்பாக தாங்கள் தான் பயிரிட்டுள்ளதாகவும் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும் முதலமைச்சர் தனிப்பிரிவு முதல் கிராம நிர்வாக அலு வலர் வரை அனைவருக்கும் கடிதம் எழுதியுள்ளார்.மேலும் கிரயம் பெற்றவர்களில் இரு வரான பேச்சிமுத்து மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் மேற்படி நிலங்களில் பயிர்ச் சேதம் ஏற்படவில்லையென்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் ரிட் மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். (றுஞ (ஆனு) சூடி: 1192/2011 மற்றும் றுஞ (ஆனு) சூடி: 1432 டிக 2011)விவசாயிகள் பயிர் செய்துள்ளனர் என்பதையும், பயிருக்குச் சேதம் ஏற்பட் டுள்ளது என்பதையும் கள அளவில் ஆய்வு செய்த அதிகாரிகள், விவசாயிகள் 210 பேர் நிவாரணப் பணத்தைப் பெற்றுக் கொள்ள சான்றிதழ் வழங்கினர். ஆனால் மேற்படி 7 நபர்களில் 6 நபர்கள் இந்தப் பணத்தை சில அதிகாரிகள் துணை யுடன் மோசடியாக பெற்றுக் கொண்ட னர். இது குறித்து ஸ்ரீவைகுண்டம் வட் டாட்சியர் அவர்கள் கூட்டுறவுத்துறை அதிகாரிக்கு தனது கடிதம் எண்: ந.க.அ.1.25247/2010 நாள்: 3.3.2011 மூலம் தெரிவித்துள்ளார். இவர்கள் மீது வணிக வியல் குற்றப்பிரிவு துறை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. குஐசு சூடி: 7/11, நாள்: 16.12.11.இதில் குற்றம் சாட்டப்பட்டவர் களில் முதல் இருவர் கூட்டுறவு மற்றும் வருவாய்த்துறை ஊழியர்கள், மூன்றா வது நபர் ப. சண்முகவேல். இவர் அஇ அதிமுகவின் தூத்துக்குடி ஒன்றியச் செயலாளராகவும், ஒன்றியப் பெருந் தலைவராகவும் உள்ளார். இந்தக் கார ணங்களினால் தான் இவர்கள் நிலத்தி லிருந்து மக்களை வெளியேற்ற வன் முறையைப் பயன்படுத்தியது குறித்து கொடுக்கப்பட்ட புகார்கள் அனைத்தும் விசாரிக்கப்படாமலேயே முடிவு செய்யப் பட்டன. க.கனகராஜ் வீட்டின் மீது பெட் ரோல் குண்டு வீசப்பட்டு நான்கு மாதங் கள் ஆகிய பிறகும் நடவடிக்கை இல் லாத நிலையில்தான் தங்கள் உத்தரவின் பேரில் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தர விடப்பட்டுள்ளது. இப்படி ஒவ்வொரு நிலையிலும் மோசடியாகவும், சட்டவிரோதமாகவும் செயல்படும் இவர்கள், தங்களது அரசி யல் மற்றும் பணபலத்தால் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்து வருகின்றனர்.எனவே, தமிழக முதல்வர், இதில் தலையிட்டு பாதிக்கப்பட்ட விவசாயி களுக்கு பட்டா வழங்கவும் தவறிழைத் தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறோம்.

Leave A Reply

%d bloggers like this: