சென்னை, ஜூன் 2-இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை தாமதமாக துவங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இந்த ஆண்டின் தென் மேற்கு பருவ மழை கேரளாவில் வரும் 5ம் தேதி முதல் துவங்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் மூலம் மேற்கு தொடர்ச்சி மலையை ஓட்டிய மாவட்டங் களில் வெப்பம் தணியும் என்று எதிர்பார்க் கப்படுகிறது.தென்மேற்கு பருவமழையால் தமிழகத் தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தேனி, நீலகிரி, கன்னியாகுமரி, நெல்லை உள்ளிட்ட சில இடங்களில் அவ்வப் போது மழை பெய்யும்.இது குறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:தென்மேற்கு பருவமழை வழக்கமாக மே இறுதியிலோ அல்லது ஜூன் 1ம் தேதியோ பெய்ய வேண்டும். ஆனால் இந்த ஆண்டு தாமதமாக 5ம் தேதி முதல் துவங்க வாய்ப் புள்ளதாக தெரிகிறது. கேரளாவில் மழை பெய்தால் குற்றால அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்து சீசன் துவங்கும் என்றனர்.

Leave A Reply

%d bloggers like this: