உதகை, ஜூன் 2- எம்ஜிஆர் அரசு திரைப்பட மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில் சேர விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து செய்தி-மக்கள் தொடர்புத் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவதுதிரைப்படத் துறை மற்றும் தொலைக்காட்சித் துறையில் மிகச்சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்களையும், இயக்குநர்களையும் உருவாக்கிவரும் எம்.ஜி.ஆர். அரசு திரைப்பட மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனம், கடந்த 50 ஆண்டுகளாக சென்னை தரமணியில் இயங்கி வருகிறது. இப்பயிற்சி நிறுவனத்தில் மேனிலைக் கல்வியில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியருக்கு ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, ஒலிப் பொறியியல், படம் பதனிடுதல், படத்தொகுப்பு பிரிவுகளிலும் பட்டப் படிப்புகளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இயக்குதல் பிரிவிலும் மூன்றாண்டு பட்டப் படிப்புக்கான 2012-13ம் கல்வி ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இப்பாடப்பிரிவில் சேர்ந்து கலைத்துறையில் தங்களது கலை ஆர்வத்தை வளர்த்துக் கொள்ள விரும்புவர்கள், இதற்கான விண்ணப்பங்களை தமிழக அரசின் றறற.வn.படிஎ.in என்ற இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply