புதுதில்லி, ஜூன் 2-தனியார் நிறுவனங்க ளுக்கு கடந்த 2006 மற்றும் 2009ம் ஆண்டுகளுக்கு இடைபட்ட காலத்தில் நிலக்கரி படுகை ஒதுக்கீடு செய்யப்பட்டதில் நடந்த ஊழல் தொடர்பான புகா ரை உறுதி செய்ய துவக் கக்கட்ட விசாரணையை சிபிஐ துவக்கியது.முதலில் வருபவர்க ளுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் நிலக்கரி படுகை ஒடுக்கீட்டை அரசு மேற்கொண்டுள்ளது. 156 நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நடைமுறை யும், உரிய முறையில் இல் லை என பாஜகவின் பிர காஷ் ஜாவேத்கர் மற்றும் ஹன்ஸ்ராஜ் ஹகிர் புகார் தெரிவித்திருந்தனர்.இந்த நிலக்கரி ஊழல் குற்றச்சாட்டு விவரத்தை சிபிஐக்கு மத்திய ஊழல் தடுப்பு ஆணையம் அனுப்பி யதை தொடர்ந்து, அந்த புகார் தொடர்பான விஷயம் உண்மைதானா என்பதை சரிபார்க்கும் ஆய்வை மத்திய புலனாய்வுக் கழகம் மேற்கொண்டுள்ளது.இதுகுறித்து சிபிஐ தரப்பு கூறுகையில், பொதுவான குற்றச்சாட்டுகள் தான் வந்தன. தனிநபர் அல்லது நிறுவனங்களை குறிப் பிட்டு புகார் வரவில்லை என தெரிவித்தது.சிபிஐ ஆய்வு செய்வது குறித்து ஜாவேத்கர் கூறுகை யில், எங்களது புகாரை சிபிசி உணர்ந்து நடவடிக் கை எடுத்துள்ளது. சிபிஐ துவக்கக்கட்ட விசாரணை செய்ய, புகார் விவரம் அனுப் பப்பட்டுள்ளது குறித்து, சிவிசி எங்களுக்கு கடிதம் எழுதியுள்ளது என்றார்.நிலக்கரி படுகை ஒதுக் கீடு பெற்ற 156 நிறுவனங் களும் உரிய முறையில் இல் லை. அவர்கள், நிலக்கரி சுரங்க பணிகளுக்கு கூடுதல் பணத்திற்கு இன்னொரு நப ரிடம் ஒப்படைத்துள்ள தாகவும் அவர் தெரிவித்தார்.தனியார் நிறுவனங்கள் பலன் அடைய கடந்த இரண்டரை ஆண்டுகளாக அமைச்சகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

Leave A Reply

%d bloggers like this: