புதுதில்லி, ஜூன் 2-நாட்டில் வரலாறு காணாத வகையில் பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டிருக்கும் சூழலில் டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையையும் உயர்த்தியாக வேண் டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கின் பொருளாதார ஆலோச கர் டாக்டர் சி. ரங்கராஜன் கூறி யுள்ளார்.தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ரங்கரா ஜன் கூறியதாவது:இந்தியாவில் தற்போது நிதிப் பற்றாக்குறை மிகக் கடுமையாக உள்ளது. இதை தடுக்க வேண்டு மானால் மானியம் வழங்கப்படு வதை குறைக்க வேண்டும். பெட் ரோலியப் பொருட்களுக்குத்தான் அதிக மானியம் வழங்கப்பட்டு வருகிறது. இதனால்தான் பெட் ரோலியப் பொருட்கள் விலையை உயர்த்த வேண்டியது அவசியமாகிறது.டீசல், கேஸ் விலையை விரைவில் உயர்த்த வேண்டும். இதற்காக பரிந் துரை செய்யப்பட்டுள்ளது. டீசல், கேஸ் விலையை கணிசமாக உயர்த் தினால் தான் நிதி பற்றாக்குறையை கட்டுப்படுத்த முடியும். இதுவும் கூட ஏழைகள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகத்தான்.இவ்வாறு அவர் கூறினார்.
நாடகம்
இந்நிலையில், மத்திய அரசு தனது வழக்கமான ‘விலைக்குறைப்பு’ நாட கத்தை அரங்கேற்றியுள்ளது. ரூ.7.50 அளவிற்கு பெட்ரோல் விலையை மிகக்கடுமையாக உயர்த்திய மன் மோகன் அரசு, மக்கள் நலனில் அக் கறை கொள்வதாகக் கூறி லிட்டர் ஒன்றுக்கு ரூ.2 விலையை குறைப்ப தாக அறிவித்துள்ளது.

Leave A Reply