கரூர், ஜூன் 2-டிஆர்இயு ரயில்வே தொழிற்சங்கத்தினர் கரூர் ரயில் நிலையம் முன்பு பட்டினிப் போராட்டம் நடைபெற்றது. கீ மேன்கள் கிரிஷ் போடும் வேலையை கோடைக்காலத்தில் தவிர்க்க வேண்டும் என்ற உத்தரவை உடன் அமலாக்கிட வேண் டும்; கரூர் ஷப்டிவிசனில் புதிதாக பணியில் சேர்ந்த வர்களுக்கு தற்காலிக அடை யாள அட்டை வழங்கிட வேண்டும், கரூர் ரயில்வே மருத்துவமனைக்கு வருகை தரும் வகையில் நிரந்தர டிஎம்ஓவை நியமித்திட வேண்டும், டிபி செக்ஷ்சன் கேட்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும், தொழிலாளர்கள் கொடுக்கும் மனுக்களை பதிவு செய்திட ரிஜீஸ்டர் முறையை அமலாக்கிட வேண்டும் என்பன உள் ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை நிறைவேற்றக் கோரி இந்த போராட்டம் நடைபெற்றது.சங்கத்தின் தலைவர் ஆர். ரத்தினம் தலைமை வகித் தார். நிர்வாகிகள் அன்பழகன், சக்தி வேல், கருப்பண்ணன், கிரு ஷ்ணமூர்த்தி, பாலசுப்பிர மணியன், ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித் தனர். கரூர் கிளைச் செயலா ளர் ஸ்மையில் கோரிக்கை யை விளக்கி பேசினார். சிஐ டியு சங்கத்தின் கரூர் மாவட் டச் செயலாளர் ஜி.ஜீவானந் தம், மாவட்டத் தலைவர் கா. கந்தசாமி, மாவட்டத் துணைச் செயலாளர் என்.ராஜீ ஆகி யோர் உண்ணாவிரதப் போராட்டத்தை வாழ்த்தி பேசினர். டிஆர்இயு மண் டல துணைத் தலைவர் எஸ். சாம்பசிவன் போராட்டத் தில் சிறப்புரையாற்றினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.