சென்னை, ஜூன் 2 -ஜூன் 6 அன்று ஏற் படும் வெள்ளி நகர்வை காண்பதற்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் 600இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதுபற்றிய விவரம் வரு மாறு:பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் நிலவு வந்து நேர்க்கோட்டுப்பாதையில் அமைந்தால் அதை சூரிய கிரகனம் என்கிறோம். அதே போன்று பூமிக்கும் சூரிய னுக்கும் நேர்க்கோட்டில் வெள்ளி வருவது வெள்ளி இடைநகர்வு என்கிறோம்.சந்திரன் பூமிக்கு அரு கில் இருப்பதால் அது சூரி யனை மறைப்பது போன்று தெரியும். ஆனால், வெள்ளி கிரகனமானதுபூமியிலிருந்து 6.8கோடி மைல் தொலை வில் உள்ளதால் அது சூரி யனை மறைக்காது. சூரிய னில் சிறு கரும்புள்ளி கடந்து செல்வதை போல் தெரியும். எனவே, இதனை வெள்ளி இடை நகர்வு என்கிறோம்.இந்த இடைநகர்வானது ஒரு நூற்றாண்டில் இரு முறை மட்டுமே வரும். இந்த நூற்றாண்டில் 2004ம் ஆண்டு வந்தது. அதன்பின் தற்போது 2012ம் ஆண்டு ஜூன் 6ம் தேதி வருகிறது. இதற்கு பிறகு 2117ம் ஆண்டில் தான் இத்தகைய நகர்வை காண முடியும்.
இது குறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் சனிக்கிழமையன்று செய்தி யாளர் சந்திப்பு நடைபெற் றது. இச்சந்திப்பில்தேசிய அறிவியல் தொழில்நுட்ப செயலாக்கக்குழுஉறுப்பினர் சி.ராமலிங்கம், வானவியலா ளர் எஸ்.பார்த்தசாரதி, பிரச் சார ஒருங்கிணைப்பாளர் எஸ்.டி.பாலகிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர் உதயன் ஆகியோர் செய்தி யாளர்களிடம் கூறியது வருமாறு:ஜூன் 6 அன்று நடை பெறும் வெள்ளி நகர்வு காலை 3.40 மணிக்கு தொடங்கு கிறது. தமிழகத்தில் காலை 5.40 மணி முதல் 10.20 மணி வரை காண முடியும். இந்த நிகழ்வை பயன்படுத்தி சிலர், கிரகபலன் மாறும், தோஷம், மந்திரம் என மக்களிடம் தவறான தகவல்களையும், பொய்ப்பிரச்சாரங்களையும் மேற்கொண்டுள்ளனர். அதனை நம்ப வேண்டாம்.இந்த வெள்ளி நகர்வை பற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த ஆயிரத்து 500 பேர் பிரச் சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் வெள்ளி நகர்வை காண 600 இடங் களில் ஏற்பாடு செய்யப்பட் டுள்ளது. சென்னையில் மெரினா கடற்கரை காந்தி சிலை, காஞ்சிபுரம், கடலூர், நாகை, குமரி ஆகிய இடங் களில் பிரம்மாண்ட ஏற் பாடுகள் செய்யப்பட உள் ளன.தமிழக அரசின் கல்வித் துறையோடு இணைந்து 10ஆயிரம் ஆசிரியர்களுக்கு வெள்ளி நகர்வை பார்ப்ப தற்கான பயிற்சி அளிக்கப் படுகிறது. அந்த ஆசிரியர் கள் பள்ளி குழந்தைகளுக்கு இந்நிகழ்வை காண்பிப்பார் கள். சூரியனை எப்போதும் வெறும் கண்ணால் பார்க்கக் கூடாது. டெலஸ்கோப்பு அல்லது பைனாக்குளரில் சூரிய பிம்பத்தை பிடித்து அதை ஒரு வெண்திரையில் வீழ்த்தி அதில் வெள்ளி நகர்வை காணலம். வெல் டிங் செய்கிறவர்கள் பயன் படுத்துகிற கண்ணாடியை பயன்படுத்தி பார்க்கலாம். சுய உதவிக்குழு பெண்கள் இந்த வெள்ளி நகர்வை வர வேற்றும், வழியனுப்பும் வகையில் வெள்ளித்திரு விழா நிகழ்ச்சி நடத்தப்படு கிறது.இவ்வாறு அவர்கள் கூறி னர்.

Leave a Reply

You must be logged in to post a comment.