ஆயிரத்துத் தொள் ளாயிரத்து முப் பத்து நான்கு மே மாதத்தில் பாட்னா நகரில் ஒரு மண்டபத் தில் இளைஞர் கள் குழுமியிருந்தார்கள். (அதில் நானும் ஒருவன்) ‘காங்கிரஸ் சோஷ லிஸ்ட் கட்சி’ என்ற பெயரில் இடதுசாரிகளான காங்கிரஸ்காரர்களின் ஒரு அமைப்பை உருவாக்குவதுதான் நோக்கம். இதற்கு இரண்டு காரணங்கள் கூறப்பட்டன.முதலாவது, காங்கிரசின் முக்கிய லட்சியமான முழுமையான விடுதலையை வென்றெடுக்க வேண்டுமானால், தொழிலாளிகளும் விவசாயிகளும் உள்ளிட்ட உழைக்கும் லட்சக்கணக்கான மக்களை காங்கிரசுக்குப் பின்னால் அணிதிரட்ட வேண்டும். அதற்கு ஏற்புடைய போராட்டங்களையும் அமைப்புகளையும் அங்கீகரிப்பதோடு, அந்தப் பாதையில் பயணிக்கும் தொண்டர்களுக்கு சோஷலிச விழிப்புணர்வையும் உருவாக்க வேண்டும்.இரண்டாவது, பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுதலை பெறுவதால் மட்டும் இந்திய மக்கள் அரசியலும் பொருளாதாரமும் உள்ளிட்ட உண்மையான விடுதலையைப் பெறமாட்டார்கள்.
அதற்கு சோவியத் யூனியனில் இருப்பதைப் போன்ற ஒரு சோஷலிச சமூகக் கட்டமைப்புப் பார்வையுடன் முன்னோக்கிச் செல்ல வேண்டும்.இந்தக் கருத்தை நாங்கள் புதிதாக வெளிப்படுத்தவில்லை. பன்னிரெண்டாண்டுக் காலமாக இதே லட்சியத்தை முன்வைத்து கம்யூனிஸ்டுகள் பணியாற்றி வந்தனர். ஆனால் அவர்களுக்கென்று ஒரு அகில இந்திய அமைப்பு உருவாகியிருக்கவில்லை. அதை நடைமுறைப்படுத்த மேற்கொண்ட முயற்சிகளையெல்லாம் பிரிட்டிஷ் அரசு இரும்புக்கரத்தைப் பயன்படுத்தி ஒடுக்கியது. பிறகு, 1934ல் கம்யூனிஸ்டுகளுக்கு ஒரு அகில இந்திய மையத் தலைமை உருவானபோது, அதை பிரிட்டிஷ் அரசு சட்ட விரோதம் என்று அறிவித்தது.எனவே கம்யூனிஸ்டுகளுக்குக் கூட சட்டப்பூர்வமாக இயங்குவதற்கு சோஷலிஸ்டுக் கட்சியைப் போன்று ஒரு அமைப்பு உருவாக வேண்டும். என்னைப்போல அதுவரை கம்யூனிஸ்டுகள் அல்லாத – சோஷலிசக் கருத்துடன் நெருங்கிவரும் – இடதுசாரிகள், உப்பு சத்தியாகிரகத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட நிகழ்வுகளின் வெளிச்சத்தில் ஒரு அகில இந்திய சோஷலிஸ்டுக் கட்சியை உருவாக்கினோம். அவ்வாறு அதுவரை கம்யூனிஸ்டுகள் அல்லாத இடதுசாரித் தொண்டர்கள் காங்கிரஸ் சோஷலிஸ்டுக் கட்சியை உருவாக்கினர். கம்யூனிஸ்டுகளும் அதில் இணைந்து பணியாற்றத் தொடங்கினர்.சட்டவிரோதக் கம்யூனிஸ்டுக் கட்சித் தலைவர்களுடன் நெருங்கிட இது எங்களுக்கு உதவிற்று. அவ்வாறு காங்கிரஸ் சோஷலிஸ்டுக் கட்சி உருவாகி ஒன்றரை ஆண்டுக்குள் காங்கிரஸ் சோஷலிஸ்டுக் கட்சிக்குள் இருந்தவாறே பணியாற்றும் ஓர் அறிவிக்கப்படாத கம்யூனிஸ்டாக நான் மாறினேன்.என்னைப் போன்ற பலரும் காங்கிரஸில் பணியாற்றிய அனுபவத்திலிருந்து காங்கிரஸ் சோஷலிஸ்டுக் கட்சிக்கும் அதிலிருந்து பெற்ற படிப்பினையைத் தொடர்ந்து கம்யூனிஸ்டுக் கட்சிக்கும் சென்றனர். அவ்வாறு 25ஆம் வயதில் காங்கிரஸ் சோஷலிஸ்டாக மாறிய நான், 1936 முதல் கம்யூனிஸ்டாகத் துவங்கினேன்.இந்த நீண்டகால அனுபவம் எனக்குக் கற்றுத்தந்தது என்ன? 62 ஆண்டுகளுக்கு முன் சோஷலிஸ்டுக் கட்சியை உருவாக்குவதில் பங்கேற்று அதற்குப் பிறகு இரண்டாண்டுகள் முற்றுப் பெறுவதற்குள் கம்யூனிஸ்டாகவும் மாறிவிட்ட நான் இப்போது அதற்கு வருந்துகிறேனா? அண்மைக் காலத்தில் கிழக்கு ஐரோப்பாவிலும் முன்னாள் சோவியத் யூனியனிலும் நிகழ்ந்த சம்பவங்களையெல்லாம் பார்த்த பிறகும் நான் இன்றளவும் கம்யூனிஸ்டாகத் தொடர்கிறேனா?இந்தக் கேள்வியை நண்பர்கள் பலரும் என்னிடம் கேட்கிறார்கள். இதுதான் என்னுடைய பதில்: இதில் எனக்கு சற்றும் வருத்தமில்லை. ஏதாவது வருத்தமிருந்தால், ஆந்திராவிலும் ஏனைய மாநிலங்களிலும் இருந்த தோழர்களைப்போல் நேரடியாக கம்யூனிஸ்டுக் கட்சிக்கு வரமுடியவில்லையே, காங்கிரஸ் சோஷலிஸ்டுக் கட்சி என்ற இடைப்பட்ட முகாமில் சில மாதங்கள் இருக்க நேர்ந்ததே என்பது மட்டும்தான். கம்யூனிஸ்டு என்ற நிலையில் 60 ஆண்டுகள் பணியாற்றிய நான் அதற்காக சற்றும் வருந்தவில்லை என்றே பொருள்.- இ.எம்.எஸ். நம்பூதிரி பாட்

Leave a Reply

You must be logged in to post a comment.