தர்மாதிகாரி கமிட்டி அறிக்கையைசெயல்படுத்தக் குழு
புதுதில்லி, ஜூன் 2-முன்னாள் ஏர் இந்தியா மற்றும் இந்தி யன் ஏர்லைன்ஸ் நிறுவன ஊழியர்களை ஒருங்கிணைத்து, ஏர்-இந்தியா என உருவாக்கியது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனைகள் குறித்து தர்மாதிகாரி கமிட்டி அறிக்கை தந்துள்ளது.இந்த அறிக்கையை செயல்படுத்துவதற் கான குழுவை அமைத்துள்ளது குறித்து விமானப் போக்குவரத்துத்துறை அமைச் சர் அஜித் சிங், வெள்ளிக்கிழமை தெரிவித் தார். 5 ஆண்டுகளுக்கு முன்னர் ஏர் இந்தியா மற்றும் இந்தியன் ஏர் லைன்ஸ் இணைக் கப்பட்டு, ஒரே நிறுவனமாக ஏர்இந்தியா பெயரில் உருவானது. இந்த ஊழியர்களுக்கு சம்பளம் ஒரே சீராக இருக்கும் வகையில், 45 நாளில் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

சி.டி. வழக்கு: பூஷன்- அமர்-முலாயம் குரல் மாதிரி சோதனை
புதுதில்லி, ஜூன் 2-சர்ச்சைக்குரிய சிடி வழக்கு தொடர்பாக மூத்த வழக்கறிஞர் சாந்திபூஷன், சமாஜ்வாதி தலைவர் முலா யம் சிங், அமர்சிங்கின் குரல் மாதிரியை பதிவுசெய்ய தில்லி தலைமை பெருநகர நீதிமன்ற நீதிபதி வினோத் யாதவ் வெள்ளிக்கிழமை அனு மதித்தார். ஒரு வழக்குத் தொடர்பாக உச்சநீதிமன்ற நீதிபதி யை சமரசம் செய்ய மூத்த வழக்கறிஞர் சாந்திபூ ஷன், முலாயம் சிங்கிடம் பேசியதாகவும், அதில், நீதி பதியை தனது மகன் பிரசாந்த் பூஷன் பார்த்துக்கொள்வார் என அவர் கூறியதாகவும் ஒரு சிடியில் குரல் பதிவாகியிருந் தது. இது தொடர்பாக தற் போது அவர்களின் குரல் மாதிரி சோதனை செய்யப்படுகிறது.

Leave A Reply

%d bloggers like this: