தில்லி : எம்எல்ஏ மீது துப்பாக்கிச்சூடு
புதுதில்லி, ஜூன் 2-தில்லியில் ஐஎன்எல்டி கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் பரத் சிங்கை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் துப்பாக்கி யால் சுட்டனர்.இத்தாக்குதலில் அந்த வழியாகச் சென்ற தரம்பால் என்பவரும் காயமடைந் துள்ளார். சனிக்கிழமையன்று காலை 8.30 மணியளவில் பரத் சிங் அலுவலகத்தின் அருகே துப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ளது என்று மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.இத்தாக்குதலில் 4-5 நபர்கள் ஈடுபட்டிருக்கலாம் என்று அவர் தெரிவித்தார். இச்சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.தில்லி குற்றங்களின் தலைநகராக மாறி வருகிறது என்று மாநில எதிர்க்கட்சித் தலைவர் வி.கே. மல்கோத்ரா குற்றம் சாட்டினார்.சட்டமன்ற உறுப்பினர் பரத் சிங், தில்லி மாநக ராட்சி மன்ற உறுப்பினர் கிருஷண் பகல்வான் என்ப வருடைய சகோதரர் ஆவார். இவர் மீது பல குற்ற வழக்கு கள் நிலுவையில் உள்ளன.

தேசிய ஊரக சுகாதாரத் திட்ட ஊழல் : சிபிஐ சோதனை
புதுதில்லி, ஜூன் 2-தேசிய ஊரக சுகாதாரத் திட்டத்தில் நடைபெற் றுள்ள முறைகேடுகள் தொடர்பாக உத்தரப்பிர தேச முன்னாள் அமைச்சர் ஆனந்த் மிஸ்ராவுக்குச் சொந்தமான லக்னோ மற் றும் கான்பூர் இல்லங்களில் சிபிஐ சோதனை நடத்தியது.இச்சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் சிக் கியதாகத் தகவல்கள் தெரி விக்கின்றன.உதவித் தலைமை மருத் துவர் ஒய்.எஸ். சச்சன் கொலை தொடர்பாக ஆனந்த் மிஸ் ராவிடம் சிபிஐ ஏற்கெனவே இருமுறை விசாரணை நடத்தி யுள்ளது. தேசிய ஊரக சுகா தாரத் திட்டத்தில் நடை பெற்ற முறைகேடுகள் தொடர் பாக சிபிஐ இதுவரை 13 வழக்குகள் பதிவு செய்துள் ளது. மேலும் 3 வழக்குகள் பதிவு செய்யப்படவுள்ளன.

Leave A Reply

%d bloggers like this: