விழிப்புணர்வு கருத்தரங்கம்
திருவாரூர், ஜூன் 2-சமூக நலத்துறையின் சார் பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் சட்டங்கள் குறித்த விழிப்புணர்வு கருத்த ரங்கம் திருவாரூர் மாவட்ட ஆட் சியர் (பொ) ந.ஜீவகனி தலை மையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சமூக நலத்துறையின் மூலம் செயல் படுத்தப்பட்டு வரும் திட்டங் கள் மற்றும் சட்டங்கள் குறித்த விளக்க கையேட்டை ந.ஜீவ கனி வெளியிட்டார். அதனை மாவட்ட காவல் கண்காணிப் பாளர் எஸ்.சேவியர்தன்ராஜ் பெற்றுக்கொண்டார்.வழக்கறிஞர் பாலம்பிகை, வரதட்சணை குறித்து விளக்க வுரையாற்றினார். ‘பெற்றோர் மற் றும் மூத்த குடிமக்கள் பரா மரிப்பு மற்றும் நலனுக்கான சட் டம்’ குறித்து வழக்கறிஞர் சங்க செயலாளர் ஆர்.முத்தையன் பேசினார். பெண்களுக்கு எதி ரான வன்கொடுமை குறித்து டிபிஎஸ்.மணிகண்ணன் உரை யாற்றினார். ‘குழந்தை திரு மணத் தடுப்புச்சட்டம்’குறித்து ஆர்.லீலாவதி விளக்கஉரை யாற்றினார். குழந்தை திரு மணத்தால் ஏற்படும் உடல் மற்றும் மனரீதியான பிரச்சனை குறித்து மருத்துவர் செந்தில் குமார் விளக்கஉரையாற்றினார்.இளைஞர்நீதிசட்டம்‘2000’ குறித்து வி.வெங்கட்ராமன் விளக்க உரையாற்றினார். கல் லூரி மாணவ மாணவியர், தொண்டு நிறுவனத்தினர் உட் பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

பழங்களை பதப்படுத்த விவசாயிகளுக்கு பயிற்சி
திருவாரூர், ஜூன் 2-திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளா கத்தில் இந்திய பயிர் பதன தொழில்நுட்பக்கழகத்தின் மூலம் உருவாக்கப்பட்ட, நகரும் உணவு பதப்படுத்து தல் பிரிவினர், பழங்களை பதப்படுத்துதல் குறித்து விவ சாயிகளுக்கு நேரடி செயல் விளக்கம் அளித்தனர்.இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் சி.நடராசன் தலைமை வகித்தார்.தக்காளிப்பழம் எவ் வாறு பதப்படுத்துவது என்று நேரடி செயல்விளக் கம் செய்து காண்பிக்கப் பட்டது. விவசாயிகளுக்கு தக்காளி சாறும் வழங்கப் பட்டது. நிகழ்ச்சியில் இந் திய பயிர் பதன தொழில் நுட்பக்கழகத்தின் உதவிப் பேராசிரியர் பி.ஹேமா பேசும்போது, ஒரு கிலோ தக்காளியில் 6 லிட்டர் தக் காளி சாறு தயார் செய்ய லாம். இந்த பதப்படுத்தும் இயந்திரம் 1 மணிநேரத்திற்கு 50 கிலோ தக்காளியை கூழ் செய்யும் திறன் கொண்டது. இதன் மூலம் 1 நாளைக்கு சுமார் 150 லிட்டர் தக்காளி கூழ் செய்யலாம்; இதன் மூலம் 1 லிட்டர் தக்காளிக் கூழ் தயார் செய்ய 18 ரூபாய் செலவாகிறது. இந்த தக் காளி கூழ் வெளிச்சந்தை யில் 38ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதன் மூலம் 1 டன் தக்காளியை கூழ் செய்யும் போது விவசாயிகளுக்கு 6 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைக் கும் என தெரிவித்தார்.மேலும் இந்த தொழில் நுட்பத்தின் மூலம் பப்பாளி, மா, வாழை, சப்போட்டா, கொய்யா, நெல்லி, பலாப் பழம், திராட்சை, ஆரஞ்சு போன்ற பழங்களையும் பதப்படுத்தி சேமித்து வைத்து பயன்படுத்தலாம் என தெரிவித்தார்.விவசாயிகளின் இருப் பிடத்திற்கு நேரடியாக சென்று, அவர்களை தொழில் முனைவோராக்க பயிற்சி அளிக்கப்பட்டு வரு கிறது. இதனை விவசாயிகள் நன்கு பயன்படுத்தி அதிக லாபம் பெற்று, பொருளா தார முன்னேற்றம் அடைய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண் டார்.வேளாண்துறை இணை இயக்குநர் கபிலன், தோட் டக்கலைத்துறை துணை இயக்குநர் இளங்கோவன், மக்கள் தொடர்பு அலுவலர் எஸ்.தினேஷ்பாபு, விவ சாயிகள் மற்றும் அரசுத் துறை அதிகாரிகள் நிகழ்ச் சியில் பங்கேற்றனர்.

Leave A Reply

%d bloggers like this: