சலவைத் தொழிலாளர் குடிசைகள் தீக்கிரை
இராமநாதபுரம்,ஜூன்2-கீழக்கரையில் குடிசை கள் தீக்கிரையாகி உடை மைகளை இழந்து தவிக் கும் சலவைத் தொழிலாளர் களுக்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண் டும். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக் கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செய லாளர் ஏ.கோவிந்தசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.இராமநாதபுரம் மாவட் டம் கீழக்கரையில் கடந்த 28ம்தேதியன்று இரவு சல வைத் தொழிலாளர்களின் 6 குடிசை வீடுகள் தீக்கி ரையாகின. சிபிஎம் மாவட் டச் செயலாளர் ஏ.கோ விந்தசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.குருவேல், தாலுகாச் செயலாளர் எம்.ராஜ் குமார், மாவட்டக் குழு உறுப்பினர்கள் இ.கண் ணகி, மகாலிங்கம், விக்டர், முனீஸ்வரி ஆகியோர் சம் பவ இடத்திற்குச் சென்று உடைமைகளை இழந்து தவிக்கும் சலவைத் தொழி லாளர்களுக்கு ஆறுதல் கூறினர். இதையடுத்து பாதிக்கப்பட்ட சலவைத் தொழிலாளர்களுக்கு புதிய வீடு மற்றும் பொருட் களுக்கான உரிய நிவார ணம் தமிழக அரசு வழங்க வேண்டும். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஏ.கோவிந்தசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

வாலிபர் சங்கம் கண்டனம்
வண்டிப்பெரியார், ஜூன் 2-வண்டிப்பெரியாரில் உள்ள அரசு மருத்துவ மனையை இளைஞர் காங் கிரஸ், என்.டி.எப் சங்கம் அடித்து நொறுக்கியது.இளைஞர் காங்கிரஸ் பிளாக் செயலாளர் கணே சன் தலைமையிலான என். டி.எப். சங்கம் எந்த வித காரணமும் இல்லா மல் அரசு மருத்துவமனைக் குள் புகுந்து கட்டில், ஜன் னல் கண்ணாடிகள், டியூப் லைட் ஆகிய பொருட்க ளை அடித்து நொறுக்கியது.மருத்துவமனையில் தாக்குதல் நடத்தியவர் களுக்கு எதிராக காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிஒய் எப்ஐ வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்த செய லுக்கு வாலிபர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

முல்லைப் பெரியாறு அணையில் தமிழக அட்வகேட் ஜெனரல் ஆய்வு
கம்பம், ஜூன் 2-முல்லை பெரியாறு அணையை தமிழக அட்வ கேட் ஜெனரல் மற்றும் உயர் அதிகாரிகள் பார்வை யிட்டனர்.முல்லைப் பெரியாறு அணையில் கோர் மாதிரி ஆய்வுக்காக போடப் பட்ட துளைகளை அடைக்கும் பணியினை தமிழக பொதுப் பணித் துறையினர் கடந்த சில தினங்களாக செய்துவரு கின்றனர். இந்நிலையில் வெள்ளியன்று காலை தமி ழக அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன், துணை அட்வகேட் ஜெனரல் குரு கிருஷ்ணகுமார், அரசு வழக்கறிஞர் உமாபதி, காவேரி தொழில்நுட்ப குழு தலைவர் சுப்பிரமணி யம், தமிழ்நாடு பொதுப் பணித்துறை முதன்மை பொறியாளர் சம்பத்குமார், கண்காணிப்பு பொறி யாளர் மோகனசுந் தரம் ஆகியோர் முல்லை பெரி யாறு அணையில் பேபி டேம், மெயின்அணை, கேலரி பகுதி, மதகுபகுதி யை பார்வையிட்டனர். பின்பு தமிழகத்திற்கு தண்ணீர் வெளியேறும் போர் பேடேம் பகுதியை யும் பார்வையிட்டனர்.இதுகுறித்து தமிழக அட்வகேட் ஜெனரல் கூறு கையில், வரும் ஜூலை மாதம் உச்ச நீதி மன்றத்தில் முல்லை பெரியாறு அணை சம்பந்தமான வழக்கு விசாரணைக்கு வருகின் றது. இதனால் தமிழக அரசு உத்தரவின் பேரில் அணையை பார்வையிட் டோம் என்றார்.

Leave A Reply

%d bloggers like this: