சீனா – ஜப்பான் இடையே நேரடி கரன்சி வர்த்தகம் வெள்ளிக்கிழமை (ஜூன் 1) முதல் தொடங்கியது.சர்வதேச அளவில் பொருளாதார ரீதியில் வலுவாக வளர்ந்து வரும் சீனாவின் முன்னேற்றத்தில் மற்றொரு மைல் கல்லாகவே இது கருதப்படுகிறது.இது தொடர்பாக சீன அந்நிய செலாவணி வர்த்தக அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “இனிமேல் சீன கரன்சியான யுவான், ஜப்பானின் யென் கரன்சியுடன் நேரடியாக மாற்றம் செய்துகொள்ளப்படும். இருநாடுகளிடையே இனி அமெரிக்க டாலர் மூலமாக பணப்பரிமாற்றம் நடைபெறாது. இந்த நடவடிக்கை மூலம் இருநாடுகளிடையே பணப் பரிமாற்றம் எளிதாகிறது. பல்வேறு நடைமுறைச் செலவுகளும் குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.எனினும் சீன அந்நியச் செலாவணி சந்தையில் ஜப்பான் கரன்சிக்கு நிகரான சீன கரன்சியின் மதிப்பு குறைந்துள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான ஜப்பான் கரன்சியின் மதிப்பு உயர்ந்ததும், சீனாவில் உள்ள ஜப்பான் நிறுவனங்கள் பெருமளவில் ஜப்பான் நாட்டு கரன்சியை வாங்கியதே இதற்கு முக்கியக் காரணமாக அமைந்தது என்று சீன அந்நியச் செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply