குற்றாலம், ஜூன் 2-குற்றாலத்தில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக் குழு சார்பில் உள் ளாட்சி பிரதிநிதிகளுக்கான இரண்டு நாள் மாநில பயிற்சி வகுப்பு துவங்கியது.சிவகங்கை நகர்மன்ற தலைவர் அர்ச்சுணன், குழித் துறை நகர்மன்ற தலைவர் டெல்பின், நஞ்சவல்லி ஊராட்சி மன்ற தலைவர் ஜீவானந்தம், பாலகுறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் முருகைய்யன், எழுதேசம் பேரூராட்சி மன்ற தலைவர் மேரிபாய் ஆகியோர் தலைமை தாங்கினர். காந்தி கிராம பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர் க.பழனித்துரை துவக்கி வைத்துப் பேசினார். கட்சி யின் மாவட்டச் செயலாளர் கே.ஜி. பாஸ்கரன் வரவேற்று பேசினார். சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ். நூர்முகம்மது அறிமுக உரையாற்றினார் . நகராட்சி நிர்வாக ஆணையகத்தின் முன்னாள் கூடுதல் இயக்கு நர் சிவசாமி சிறப்புரையாற் றினார் .கட்சியின் மாநிலச் செய லாளர் ஜி.ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு உரையாற் றினார்.

Leave A Reply

%d bloggers like this: