கோவை, ஜூன் 2-கோவை மணிகாரம்பாளையத்தில் சிஐடியு அகில இந்திய பொதுக்குழு கூட்டம் சனிக்கிழமை எழுச்சியுடன் துவங்கியது. அகில இந்தியத் தலை வர் ஏ.கே.பத்மநாபன் சிஐடியு செங்கொடியை பொதுக்குழு உறுப்பினர்களின் எழுச்சிமிகு முழக் கங்களுக்கிடையே ஏற்றிவைத்தார். பின்னர் தியாகி கள் நினைவுத் தூணுக்கு தலைவர்கள், பிரதி நிதிகள் மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினர். வரவேற்புக்குழுவின் தலைவரும், கோவை நாடாளுமன்ற உறுப்பினருமான பி.ஆர் நடராஜன் வரவேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:நாடு முழுவதிலும் இருந்து வந்துள்ள உழைக் கும் மக்களின் போராட்டத் தளபதிகளை, பல்வேறு விதமாக தியாகங்கள் புரிந்த, அடக்கு முறைகளைச் சந்தித்த அனுபவம் வாய்ந்த உங்களை கோவை சின்னியம்பாளையம் தியாகிகள், ஸ்டேன்ஸ் மில், கோத்தாரி மில் தியாகிகளின் ரத்தம் சிந்தப்பட்ட இந்த பெருமைமிகு போராட்ட பூமியான கோவை மக்களின் சார்பில் வரவேற்கிறோம். ஒரு காலத் தில் தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்பட்ட கோவையின் பஞ்சாலைகள் மற்றும் ஜவுளி தொழில் ஆளும் அரசுகளின் தவறான பொருளாதார கொள்கைகளால் கடும் நெருக்கடி யை சந்தித்து வருகின்றன. இதுபோன்று நாடுமுழு வதும் உள்ள பல்வேறு தொழில் மற்றும் விவசாயம் பாதிக்கப்பட்டு வருவதை குறித்து விவாதிக்க இங்கு கூடியிருக்கிறோம் என தெரிவித்தார். இதன்பின் அரங்கில் தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கத்தின் புதிய கொடி யை ஏ.கே.பத்மநாபன் மற்றும் பொதுச்செயலாளர் தபன் சென் எம்.பி ஆகியோர் அறிமுகப்படுத்தினர். இக்கொடியை அச்சங்கத்தின் பிரதிநிதிகள் பெற்றுக் கொண்டனர். இந்த பொதுக்குழு கூட்டம் ஞாயிறு, திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய தினங்களில் தொடர்ந்து நடைபெற உள்ளது. நிறைவு நாளான செவ்வாய் (ஜூன்-5) அன்று மாலை கோவை சித்தாபுதூர் விகேகே மேனன் சாலையில் இருந்து உழைக்கும் மக்களின் பேரணி 100அடி சாலை வழியாக சிவா னந்தா காலனியை வந்தடைகிறது. கலை நிகழ்ச்சி யுடன் கூடிய மாபெரும் பொதுகூட்டம் நடைபெறு கிறது. இப்பொதுக்குழு கூட்டம், கருத்தரங்கம் மற்றும் பேரணி உள்ளிட்ட நிகழ்வுகளில் சிஐடியு தலைவர்கள் டாக்டர் ஹேமலதா, டி.கே.ரங்கரா ஜன் எம்.பி, அ.சவுந்தரராசன் எம்.எல்.ஏ ஆர்.சிங் காரவேலு, உள்ளிட்ட மத்திய, மாநில தலைவர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Leave A Reply

%d bloggers like this: