கோவை, ஜூன்2-கோவை அரசு மருத்துவமனையின் சாலையை மேம்படுத்த பி.ஆர்.நடராஜன் எம்.பி. இதுவரை ரூ.10 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளார்.கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற தினசரி 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் புற நோயாளியாக வந்து செல்கின்றனர். உள்நோயாளிகளாக 2500-க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏழை-எளிய மக்கள் சிகிச்சை பெறும் இந்த மருத்துவமனையை மேம்படுத்த கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கடந்த நிதி ஆண்டில் ரூ.22 லட்சம் ஒதுக்கீடு செய்தார். இதன் மூலம் இருதய நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க நவீன கருவிகள், நவீன எக்ஸ்ரே கருவிகள், குடிநீர் நிலையங்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.இந்நிலையில் மருத்துவமனையில் உள்ள சாலைகள் மிகவும் மோசமாக உள்ளதால் தள்ளுவண்டிகளில் நோயாளிகளை கொண்டு செல்வதில் சிரமம் உள்ளது. எனவே மருத்துவமனை சாலைகளை செப்பனிட இந்த நிதி ஆண்டு நிதியில் இருந்து ரூ.10 லட்சத்துக்கான நிதி ஒதுக்கீட்டு ஆணையை கோவை அரசு மருத்துவமனை முதல்வர் டாக்டர் விமலா, இருப்பிட மருத்துவ அதிகாரி டாக்டர் சிவப்பிரகாசம் ஆகியோரிடம் வெள்ளிக்கிழமை வழங்கினார்.இந்த நிகழ்ச்சியில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் யு.கே.சிவஞானம், கிழக்கு நகரச் செயலாளர் என்.ஜாகீர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் அ.ர.பாபு மற்றும் அழகிரிசாமி ஆகியோர் பங்கேற்றனர்.

Leave A Reply

%d bloggers like this: