அரியலூர், ஜூன் 2 -அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியம் கோடங் குடி மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா வெள்ளி யன்று(ஜூன் 1) மாலை 6 மணிக்கு நடைபெற்றது.விழாவையொட்டி இரவு 11 மணிக்கு வாணவேடிக் கையுடன் அம்மன் வீதி உலா வருவது வழக்கம். இந்த தருணத்தில் விழா துவங்கும் முன்பு எதிர் பாராத விதமாக அங்கு வைக்கப்பட்டிருந்த வாண வெடியில் தீப்பற்றி அனைத்து வெடிகளும் ஒரே நேரத்தில் வெடித்ததில் சிந்தாணி சரோஜா(55), கரைமேடு கோவிந்தசாமி(60) ஆகி யோர் பலியாகினர். மேலூர் கோடங்குடியை சேர்ந்த கணேசன்(45), ராமன்(45), மோகன்(28), வீ.கணே சன்(30), சித்தெலி கிராமத் தைச் சேர்ந்த ராமானுஜம் (60) உள்பட 14 பேர் படு காயமடைந்தனர். அவர்கள் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையிலும் தஞ்சை மருத்துவமனை யிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இறந்தவர்களின் உடல் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் விபத்து பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின் றனர். இந்த வெடி விபத்தில் செல்வராஜின் பெட்டிக் கடை முழுவதும் எரிந்து சாம்பலானது. அரியலூர் எம்எல்ஏ துரை மணிவேல், தா.பழூர் சேர்மன் சுதா ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினர்.

Leave a Reply

You must be logged in to post a comment.