பாரசிடமால் மாத்திரைகளை அதிகமாக உட்கொள்வதன் மூலம் கல்லீரல் பாதிக்கப்படும் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. பாரசிடமால் மாத்திரைகளை ஒருவர், ஒரு நாளுக்கு 4 கிராமிற்கு மேல் உட்கொள்ளக்கூடாது. ஆனால் பெரும்பாலானவர்கள், மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட அளவை விட அதிகமாக பாரசிடமால் மாத்திரைகளை உட்கொள்வதாக சிகாகோவில் உள்ள வடமேற்கு பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இவ்வாறு உட்கொள்வதால் கல்லீரல் அதிகமான அளவு பாதிப்புக்கு உள்ளாகிறது. ஒரு சில பெரியவர்கள், தான் எவ்வளவு மாத்திரைகள் உட்கொண்டோம் என்பதையே மறந்து விடுகிறார்கள். ஒருவர் ஒரு நாளைக்கு, 4 கிராம் அளவிற்கு பாரசிடமால் மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும். அல்லது 500 மில்லிகிராம் அளவு மாத்திரைகளை இரண்டுக்கு மேல் எடுக்கக் கூடாது. இதைமீறி, அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்ளும் பாரசிடமால் மாத்திரைகள் மூலம் கல்லீரல் பாதிக்கப்படுவதோடு, மூளை பாதிக்கப்படும் அபாயமும் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: