தூத்துக்குடி, ஜூன் 2-இந்திய கட்டுமானத் தொழிலாளர் சம்மேளனத் தின் 7வது மாநில மாநாடு ஜூலை 27, 28, 29 ஆகிய மூன்று தினங்கள் தூத்துக் குடியில் நடைபெற உள் ளது. மாநில மாநாட்டை சிறப்பாக நடத்திட வர வேற்புக்குழு அமைக்கப் பட்டுள்ளது. அதன் நிர்வாகி கள் கூட்டம் வெள்ளிக் கிழமை மாலை சிஐடியு மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.வரவேற்புக்குழுத் தலை வர் கே.பொன்ராஜ் தலைமை வகித்தார். சிஐடியு மாவட் டச் செயலாளர் தி.குமார வேல், வரவேற்புக்குழுச் செயலாளர் வே.ஆறுமுகம், சங்கத்தின் தலைவர் செல் லம், வரவேற்புக்குழு பொரு ளாளர் அல்போன்ஸ் லிகோரி, வரவேற்புக்குழு நிர்வாகிகள் டெரன்ஸ், டென்சிங், ஞான துரை, வை.பாலசுப்பிரமணி யன், ப்பாத்துரை, இசக்கி முத்து, இராமர், நவநீதன், இ.முருகன், சாம்பசிவம், இராமசாமி, கே.எஸ்.அர்ச் சுணன், பேச்சிமுத்து, எம். முருகன், திருத்துவராஜ், ஏ.கணேசன், மாரியப்பன், கோபால், எம்.பெருமாள், ஆர்.முருகன், செல்வக் குமார், சிவபெருமாள் உள் பட பலர் பங்கேற்றனர்.ஜூலை 27 அன்று மாலை 4 மணிக்கு 50 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட கட்டு மானத் தொழிலாளர்கள் பங்கேற்கும் பேரணியும் பொது மாநாடும் அதனைத் தொடர்ந்து 28, 29 ஆகிய இரு தினங்கள் அபிராமி திருமண மண்டபத்தில் நடைபெறும். பிரதிநிதிகள் மாநாட்டையும் சிறப்பாக நடத்திடுவது என்றும், குமரி யில் இருந்து ஜே.ஹேமச் சந்திரன் நினைவாக கொடி, திண்டுக்கல்லிலிருந்து ஆர்.எஸ்.ராஜேந்திரன் நினை வாக கம்பம், தூத்துக் குடிக்கு வேன் மூலம் எடுத்து வரப்படவுள்ளன. அதற்கு மாவட்டத்தில் சிறப்பான வரவேற்பு அளிப்பது என் றும் முடிவு செய்யப்பட்டது.

Leave A Reply

%d bloggers like this: