கடலூர், ஜூன் 2-கடலூர் அருகே உப்பனாற்றின் நடுவே 12 பேர் ஆபத்தான நிலையில் அரசு மருத் துவமனையில் சிகிச்சை பெற்று வருகின் றனர்.கடலூர் அருகே உள்ள சங்கொவிக் குப்பம் கிராமத்தில் திரவுபதியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டு தோறும் தீ மிதி திருவிழா நடைபெறும். அருகே உள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங் களில் இருந்து ஆயிரக்கணக்கனோர் இவ் விழாவிற்கு வருவார்கள்.சங்கொவிக்குப்பம் கிராமத்தின் ஒரத் தில் உப்பனாறு ஓடுகிறது. உப்பானற்றின் மறு கரையில் நெச்சிக்காடு கிராமம் உள் ளது. நெச்சிக்காடு கிராமத்திலிருந்து கட லூர் உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லவும், மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்லவும் ஆற்றை கடந்தவுடன் செல்ல வேண்டும்.அதேபோல் திருவிழாவிற்கும் அக்கிரா மத்திலிருந்து ஏராளமானோர் வந்திருந் தனர். வெள்ளிக்கிழமை மாலை வந்த அவர்கள், தீ மிதி திருவிழாவை பார்த்து விட்டு, இரவு பாட்டு கச்சேரி பார்த்து விட்டு சங்கொவிக்குப்பம் மணல் பரப்பி லேயே தூங்கிவிட்டு காலை 5.30 மணி வாக்கில் நெச்சிக் காட்டிற்கு உப்பானற் றில் படகு (தோனி) மூலம் சென்றுள்ளனர். கையிறு மூலம் இழுத்து கரையை கடக் கும் தேரணி நடு உப்பனாற்றில் சென்ற போது அனைவரும் ஒருபக்கமாக சாய்ந்த தால் கவிழ்ந்துவிட்டது.
அப்போது படகில் 5 குழந்தைகள் 10 பெண்கள் உள்ளிட்ட 25க் கும் மேற்பட்டோர் இருந்தனர்.அதிகாலை நேரம் என்பதால் காபாற்று வதற்கு கூட ஆட்கள் இல்லை. படகில் சென்றவர்களே சிலரை கரைக்கு இழுத்து வந்து போட்டனர். சி.என். பாளையத்தைச் சேர்ந்த கர்ணன் மனைவி ராதிகா (25), நெச்சிக்காட்டை சேர்ந்த ராஜமாணிக்கத் தின் மனைவி லோகநாயகி (25), நடன சபாபதி (15) ஆகிய மூன்று பேரும் பலி யானார்கள். நடன சபாபதியின் சடலம் மட்டும் கிடைக்காததால் தீயணைப்புப் படை யினர் தேடி வருகின்றனர்.மேலும் கணேஷ் (3), திவ்யா (1), ஆதி லட்சுமி (5), தீபா (18), மணிவண்ணன் (17), பாரதி (17), தையல் நாயகி (55), கர்ணன் (30), பழனிம்மாள் (60) ஆகிய 12 பேர் மீட்கப் பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பழனியம்மாள் என்ற மூதாட்டி 60 வயது நான்கு குழந்தைகளை காப்பாற்றினார். குழந்தைகளை தோளில் போட்டுக் கொண்டு நீச்சல் அடித்து கரை சேர்த்துள்ளார். தனது மகள் ராதிகாவை தன்னால் காப்பாற்ற முடியாமல் போய் விட்டது என்று கதறி அழுதார்.நெச்சிக்காட்டையும் செம்மங்குப்பத் திற்கும் இடையே உப்பனாற்றின் குறுக்கே கடந்த 7 வருடங்களாக மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. அமை வேகத்தில் நடைபெறும் பணி முடியும் தருவாயில் உள்ளது. இப்பாலம் விரைவாக கட்டி முடிக்கப்பட்டிருந்தால், இவ்விபத்து நடந் திருக்காது என்று கிராம மககள் கூறுகின் றனர். விபத்து நடந்த இடத்தையும், மருத் துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர் களையும் ஊரக தொழில் துறை அமைச் சர் எம்.சி. சம்பத் பார்வையிட்டு ஆறுதல் கூறி னார். பாலம் கட்டுமான பணியை விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.தேடும்பணியினை மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன், டிஜிபி சண்முக வேல் ஏடிஎஸ்பி ராமகிருஷ்ணன் உள்ளிட் டோர் விரைவு படுத்தினார்கள். கடந்தாண் டும், இதே இடத்தில் இதே படகு கவிழ்ந்து பள்ளி மாணவர்கள் 10 பேர் காயமடைந் தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

%d bloggers like this: