புதுக்கோட்டை, ஜூன் 2 -தாங்கமுடியாத அள விற்கு மக்கள் மீது சுமை களை ஏற்றிவிட்டு, நலத்திட் டங்கள் என்னும் பெயரில் சில அறிவிப்புகளை விளம் பரங்களுக்காக மட்டுமே செய்து கொண்டிருக்கிறது தமிழக அரசு என்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநில செயற்குழு உறுப்பினரும் சட்டமன்ற உறுப்பினருமான ஏ.லாசர் கூறினார்.புதுக்கோட்டை இடைத் தேர்தலில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் என். ஜாகீர்உசேனை ஆதரித்து மார்க்சிஸ்ட் கட்சித் தலை வர்கள் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்ற னர். சனிக்கிழமையன்று புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகில் துவங்கிய பிரச்சாரத்தில் கலந்து கொண்ட அவர் மேலும் பேசியதாவது:சிறப்பாக மக்கள் பணி யாற்றிய இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி தோழர் எஸ். பி.முத்துக்குமரன் அகால மரண மடைந்ததைத் தொடர்ந்து இந்த தேர்தல் நடக்கிறது. ஒரு கட்சியின் உறுப்பினர் மரணமடைய நேர்ந்தால் அந்தக் கட்சிக்கே அந்த இடத்தை விட்டுக்கொ டுத்து விட வேண்டுமென மரபி ருக்கிறது. முத்துக்கும ரன் எம்எல்ஏவாக தேர்ந் தெடுக்கப்பட்டு ஓராண்டு கூட முடிவடையாத நிலை யில் சிபிஐக்கே போட்டி யிட அதிமுக வாய்ப்பளித் திருக்க வேண்டும்.திமுக ஆட்சியின் மீது மக்களுக்கு இருந்த வெறுப் பும், தேமுதிக, சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட கட்சிக ளின் கூட்டணியினாலுமே அதிமுக ஆட்சியமைத்தது. தனது சுயபலத்தால்தான் வெற்றி பெற்றோம் என அதிமுக நினைத்தால் அது தவறானதாகும். வாக்களித்த மக்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக இந்த ஆட்சி இருக்கவேண்டுமென முதல் சட்டசபைக் கூட்டத் தொடரிலேயே நாங்கள் சொன்னோம்.
ஆனால், இந்த அரசு மக்களுக்குச் செய்வதை விட, அவர்களிடமிருந்து எவ்வளவு பறிக்க முடியு மென்பதைப் பற்றியே சிந் திக்கிறது. பேருந்துக் கட் டண உயர்வால் மட்டும் வருடத்திற்கு இரண்டாயி ரம் கோடி ரூபாய்க்கு மேலே இந்த அரசு வருமானம் பார்க் கிறது. இந்த அரசு தொழில் கொள்கையில், கல்விக் கொள்கையில், வர்த்தகக் கொள்கையில் மக்கள் நலனைப் புறந்தள்ளிவிட்டு முதலாளிகளின் நலனுக்கா கவே செயல்பட்டுக் கொண் டிருக்கிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இத்தேர்தலில் போட் டியிட்டிருந்தால் தேமுதிக வும், மார்க்சிஸ்ட் கட்சியும் அதற்கு ஆதரவளித்திருக் கும். தேர்தல் களத்தில் ஆளுங்கட்சிக்கு எதிராக வேட்பாளரை நிறுத்தவில் லை என்றால் ஜனநாயகம் பாழ்பட்டுவிடும். ஆளுங் கட்சி தன்னை தட்டிக் கேட்க ஆளில்லை என்கிற ஆணவத்தில் செயல்படும். ஜனநாயகத்தைப் பாதுகாப் பதற்காகவும், இந்த ஆட்சி யின் மக்கள் விரோத நடவ டிக்கைகளை அம்பலப் படுத்துவதற்காகவும் இந்த அணி களத்தில் நிற்கிறது. எனவே, புதுக்கோட்டைத் தொகுதி வாக்காளர்கள் முரசு சின்னத்தில் வாக்க ளித்து பெருவாரியான வாக் குகள் வித்தியாசத்தில் என். ஜாகீர்உசேனை வெற்றி பெறச் செய்வார்கள் என்று பேசினார்.பிரச்சாரப் பயணத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ப.சண்முகம் தலைமை வகித்தார். சென் னை எழும்பூர் தொகுதி எம்எல்ஏ நல்லதம்பி, மார்க் சிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் எம்.சின்னத் துரை, தேமுதிக தேர்தல் பிரிவுச் செயலாளர் அக்பர், சிவகங்கை மாவட்டச் செய லாளர் சிங்கை ஜின்னா, முன்னாள் நகர்மன்ற உறுப் பினர் சண்முகபழனியப் பன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.செபஸ்தியான், க.செல் வராஜ், ஏ.ஸ்ரீதர், நகரச் செய லாளர் சி.அன்புமணவா ளன், மாவட்டக்குழு உறுப் பினர்கள் எம்.ஜியாவுதீன், எஸ்.பாலசுப்பிரமணியன், கே.முகமதலிஜின்னா, எம். ராமசாமி, டி.சலோமி, நக ரக்குழு உறுப்பினர்கள் மிசா.மாரிமுத்து, பழனிச் சாமி, பிச்சைமுத்து, தேமு திக சார்பில் மாவட்டப் பொருளாளர் கதிரவன், நகரச் செயலாளர் சிங்க முத்து, மாவட்ட துணைச் செயலாளர் சாலை வித்த கன் உள்ளிட்ட ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.