உதகை, ஜூன் 2-உதகையில் கோடை சீசன் மே மாதத்துடன் முடிவடைந்து, ஜூன் மாதத்திலிருந்து சுற்றுலா காலம் முடிந்து வழக்கமான சூழ்நிலை தொடங்குமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில், உதகையில் வெள்ளிக்கிழமை காலை வெயில் கொளுத்தியது. ஆனால், பிற்பகலுக்கு மேல் வானம் இருட்டத் தொடங்கி மாலையில் பலத்த காற்றுடன் பலத்த மழை பெய்தது. இம்மழையின்போது, பெரிய அளவிலான ஐஸ் கட்டிகளும் விழுந்தன. மேலும், மழையுடன் காற்றும் பலமாக வீசியதால், உதகை-காந்தல் சாலை படகு இல்லம் பகுதியில் மரங்கள் விழுந்தன. இதனால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து பல்வேறு இடங்களில் மின்கம்பிகள் அறுந்து விழுந்ததால், நகரின் பல இடங்களில் மின்தொடர்பும் துண்டிக்கப்பட்டுள்ளது. மின் தொடர்பு துண்டிக்கப்பட்டிருப்பதால் நகரின் சில பகுதியில் வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: