ஈரோடு, ஜூன் 2- ஈரோடு மாநகராட்சியில் பிளாஸ்டிக் பைக ளுக்கான தடை வெள்ளிக்கிழமை (ஜூன் 1) முதல் அமலுக்கு வந்தது. 40 மைக்ரானுக்கும் குறைவாக இருக்கும் பிளாஸ்டிக் பைகளால் சுற்றுச்சூழலுக்கு மிகுந்த பாதிப்பு ஏற்படுகிறது.இதைத் தொடர்ந்து அனைத்து உள்ளாட்சி அமைப்புகளும் இது போன்ற பைகளுக்குத் தடை விதிக்க வேண்டுமென மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, ஈரோடு மாநகராட்சியில் 40 மைக்ரான் தடிமனுக் கும் குறைவாக இருக்கும் பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இவற்றை அதிகமாகப் பயன்படுத்தும் டிபார்ட்மென்டல் ஸ்டோர்கள், ஜவுளிக் கடைகள், மளிகைக் கடை கள் உள்ளிட்ட சுமார் 10 ஆயிரம் கடைகளில் எச்ச ரிக்கை நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. இதன்படி மாநகராட்சி நிர்வாகத்தின் வேண்டுகோளை ஏற்று நேதாஜி தினசரி மார்க்கெட் வியாபாரிகள் சங்கத் தினர் வெள்ளிக்கிழமை (ஜூன் 1) முதல், தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்த மாட்டோம் என உறுதி எடுத்துள்ள னர். மேலும். தங்களைத் தேடிவரும் வியாபாரிகளி டம் விழிப்புணர்வு செய்யும் வகையில், பிளாஸ்டிக் விழிப்புணர்வு நோட்டீசையும் அச்சடித்து தங்க ளது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: