இந்திய சினிமா உலகின் பிதாமகன்களில் ஒருவராக கருதப்படுபவர் இயக்குநர் மிருணாள் சென். வங்காளத்தை சேர்ந்த மிருணாள் சென் தனது திரைப்படங்களின் மூலம் பல புதுமையான சமூக கருத்துக்களை விதைத்ததுடன்,மத்தியதரவர்க்கத்தின்வாழ்க்கைமுறையையதார்த்தமான பல்வேறு படைப்புகளின் மூலம் இந்திய சினிமாவிற்கு வழங்கியவர். இவர் இயக்கிய ஏக் தின் ப்ரதி தின், புவன் ஷோம், காந்தர் உள்ளிட்ட படங்கள் பலதரப்பட்டவர்களின் பாராட்டுகளைப் பெற்ற திரைப்படங்களாகும். இவரது இயக்கத்தில் ஆங்கிலேய ஆட்சிக் காலத்தின்போது இந்திய பெண்ணுக்கும், புலம் பெயர்ந்த சீன நாட்டைச் சேர்ந்தவருக்கும் இடையிலான அன்பை அரசியல் பின்னணியுடன் சொல்லும் வகையில் சித்தரிக்கப்பட்டது ‘நீல் ஆகாஷெர் நீச்சே‘ என்ற திரைப்படம். இப்படத்தை இந்திய அரசு அப்போது தடை செய்து உத்தரவிட்டது. சுதந்திர இந்தியாவின் அரசு தடை செய்த முதல் திரைப்படம் இப்படமாகும். இதன்பின்னரும், அரசியல் கருத்துக்களை முன்வைத்தே பல திரைப்படங்களை எடுத்தார். இதனிடையே இந்தியாவின் ஐந்தாயிரம் ஆண்டு வரலாற்றை இயக்கித் தருமாறு இந்திய அரசு வேண்டிக்கொண்டதன் அடிப்படையில் ‘மூவிங் பெர்ஸ் பெக்டிவ்ஸ்‘ என்ற ஆவணப்படத்தை மிருணாள் சென் இயக்கினார்.
உலகப் புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழா உள்ளிட்ட பல்வேறு சர்வதேச திரைப்பட விழாவில் இவரது திரைப்படங்கள் திரையிடப்பட்டுள்ளன. இந்நிலையில் மிருணாள் சென் தன்னுடைய 90 வது பிறந்தநாளை சமீபத்தில் எளிமையாக கொண்டாடினார். அப்போது, மிருணாள் சென் “இன்று என்னிடம் 5 கோடி ரூபாய் கொடுத்து படம் இயக்கித் தரக் கேட்கிறார்கள். அந்தப்பணத்தில் நான் ஐந்து படங்களை எடுத்துவிடுவேன்” என பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற கூட்டத்தினரிடையே தெரிவித்துள்ளார். மேலும், திரைப்பட இயக்குநர்கள் எல்லாம் சமூக விஞ்ஞானிகளாகவும் இருக்க வேண்டும் என தெரிவித்தார்.

Leave A Reply