கோயம்புத்தூர், ஜூன் 1 -காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் நாசகரக் கொள்கைகளுக்கு எதிராக போர்க் குணமிக்க போராட்டங்களை நடத்துவோம் என்று தொழிலாளர்களுக்கு இந்தியத் தொழிற்சங்க மையத்தின்(சிஐடியு) பொதுச் செயலாளர் தபன்சென் எம்.பி. அழைப்பு விடுத்தார்.கோயம்புத்தூரில் சனிக்கிழமை துவங் கயுள்ள சிஐடியு பொதுக்குழு கூட்டத்தை யொட்டி நடைபெற்ற செய்தியாளர் சந்திப் பில் அவர் கூறியதாவது:பிரதமர் மன்மோகனும், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியும் தேசத்தின் பொருளா தார வளர்ச்சி 8.6 சதவிகிதம் என்றனர். ஆனால் தற்போது கடந்த காலாண்டில் 5.3 சதவிகித வளர்ச்சி மட்டுமே என அறி விக்கப்பட்டுள்ளது.இந்த வளர்ச்சியின் பலன்கள் யாருக் குப் போய்ச்சேருகிறது. கடந்த 20 ஆண்டு கால தாராளமயத்தால் பலன்பெற்றவர்கள் நாட்டின் 122 கோடிப்பேரில் வெறும் 55 பேர் மட்டும்தான். 12 லட்சம் கோடி ரூபாய் களுக்கு போடப்பட்டும் நமது பட்ஜெட் வளங்களை பகிர்ந்தளிப்பதாக இல்லை.
ஆனால், தேசத்தின் 78 சதவிகித மக்கள் தினசரி 20 ரூபாய்கூட செலவழிக்க முடி யாத வறிய நிலையில் உள்ளனர். எனவே மத்திய அரசின் பொருளாதாரக் கொள் கைகள் ஏழைகளை மேலும் ஏழைகளாக ஆக்கியிருக்கிறது. பொதுமக்கள், தொழி லாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக் கிறார்கள். இதற்கெதிராகப் போர்க்குண மிக்க போராட்டங்களை எதிர்வரும் ஜூலை 10 அன்று இடதுசாரிகள் நடத்து கிறார்கள்.தனியார்மயத்தால் பாதிப்பொன்றுமில்லை; வெறும் பங்குகளைத்தானே விற்கிறோம். 51 சதவிகிதம் அரசு தானே வைத்திருக்கிறது என்று வாதாடுகிறார்கள். இந்திய நிலக்கரி நிறுவனம், நிலக்கரியை நமது நாட்டின் மின்உற்பத்தி நிறுவனங்களுக்கு வழங்க முடிவதில்லை. ஏனென்றால் அதில் ஒரு சதவிகித பங்கு வைத்துள்ள பிரிட்டன் நிறு வனம் நிலக்கரியை உள்நாட்டில் விற்க எதிர்ப்பு தெரிவிக்கிறது. எனவே தான் அரசு பொதுத்துறை நிறுவனங்களைப் பாது காக்க வேண்டுமென்றால் பங்குகளை விற்கக் கூடாது என்கிறோம். அதேபோல் பெட்ரோல் விலை உயர்வுக்கு அரசு கூறும் காரணங்கள் மோசடியானவை. பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், எரிவாயுவிற்கு அரசு மானியம் தருவதாக கூறுவது ஏமாற்று. ஏனென்றால் விலை உயர்வு மூலம் ஒவ்வொரு முறையும் மக்களிட மிருந்து மூன்று மடங்கு திரும்பவும் எடுத்துக் கொள்கிறார்கள்.அரசின் 45 சதவிகித வருமானம் பெட்ரோலிய பொருட்கள் மீதான வரி மூலமே பெறப்படுகிறது. எனவே, அரசு மக்களுக்கு மானியம் தருவதாகச் சொல்வது பொய், மக்கள் தான் அரசுக்கு மானியம் தருகிறார்கள். சர்வதேச கச்சா எண்ணெய் விலை உயர்வு என்று காரணம் காட்டுவதும் ஏமாற்று வேலையே. ஏனென்றால் சர்வதேச விலை நிலவரப்படி விற்க வேண்டுமானால் 38 ரூபாய் தான் ஒரு லிட்டர் பெட்ரோல்.
சென்னையில் பெட்ரோல் லிட்டர் 78 என்றால் மீதி 40 ரூபாய் வரிகள் தான். அதேபோல் டாலருக்கு எதிரான ரூபாயின் வீழ்ச்சி தான் காரணம் என்பதும் தவறான வாதமாகும். ஏனென்றால் இந்தக் காலத்தில் ரிலையன்ஸ், எஸ்ஸார் போன்ற எண்ணெய் நிறுவனங்கள் சுத்திகரிப்பு மற்றும் விநியோகம் மூலம் கொள்ளை லாபம் பார்த்திருக்கின்றன.எனவே, மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான அரசு மோசடித்தன மான காரணங்களைக் கூறி மக்களை ஏமாற்றப் பார்க்கிறது. எனவே அரசின் தவறான அரசியல் மற்றும் பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிரான போராட்ட வியூகங்களை சிஐடியு பொதுக்குழுவில் விவாதித்து முடிவெடுப்போம்.

Leave A Reply