பாரீஸ், ஜூன் 1-ஐரோப்பிய யூனியனில் உள்ள முக்கியமான நாடு பிரான்ஸ். இந் நாட்டில் லேலையில்லா திண்டாட் டம் வேகமாக அதிகரித்து, வரலாறு காணாத அளவில் உயர்ந்திருக்கிறது. அதாவது 1999 ல் மொத்தம் 4 ஆயிரத்து 500 பேர் மட்டுமே வேலை யில்லாமல் இருந்தனர். இந்த எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து வந்தது. இந்நிலை யில் அமெரிக்காவில் ஏற் பட்ட பொருளாதார நெருக்கடி உலகம் முழுவதும் பிரதிப லித்தது. அதன் விளைவாக பல நிறுவனங்கள் திவாலா கின. வேலையின்மையும் பன்மடங்கு அதிகரிக்க துவங்கியது. அதன் விளை வாக தற்போது அந்நாட்டில் வரலாறு காணாத அளவில் அதிகரிக்க தொடங்கியது. அப்படி அதிகரிக்க இன்று 28.9 லட்சம் பேர் அந்நாட் டில் வேலையில்லாமல் திண்டாடி வருகின்றனர். இந்த எண்ணிக்கையும் வேலை இல்லாமல் பதிவு செய்திருக்கும் பட்டியலின் அடிப்படையிலானது. உண் மையில் வேலையில்லாதவர் களின் எண்ணிக்கை இதை விட அதிக அளவில் இருக் கக்கூடும் என அந்நாட்டி னர் தெரிவிக்கின்றனர்.இந்த நூற்றாண்டில் எப் போதும் இல்லாத அளவில் ஏப்ரல் மாதத்தில் இருந்தே எந்நேரமும் மக்கள் வேலை தேடி அலையத் துவங்கிவிட் டனர். மேலும் வரும் மாதங் களில் இந்த வேலையில்லாத திண்டாட்டம் இன்னும் அதிகரிக்கும் என்று அந் நாட்டின் தொழிலாளர் அமைச்சகம் தெரிவித்துள் ளது.
தற்போது பிரான்சில் ஆட்சியை அமைத்திருக் கும் சோசலிஸ்ட் கட்சி, தேர் தல் பிரச்சாரத்தின் போதே கார்ப்பரேட் நிறுவனங்கள் பலரை வீட்டுக்கு அனுப்ப திட்டமிட்டு வருகிறது என் பதை சுட்டிக்காண்பித்திருந் தது. மேலும் வரும் மாதங் களில் இந்த வேலையின்மை பிரச்சனையை இந்த அரசு முழுமையாக எதிர்கொள் வதற்கான வழிவகைகளை காணும் என்று தொழிலா ளர் துறை அறிவித்திருக் கிறது. தற்போது அங்கு நிரந்தர வேலை என்பதை விட தங்களது குடும்பத்தை காப்பாற்ற தற்காலிக வேலைகிடைத்தால் கூட போதும் என்ற அளவில் வேலை தேட துவங்கியுள் ளனர். அதுவும் அவ்வளவு எளிதாக கிடைக்காத நிலை யே நீடிக்கிறது. அந்நாட்டில் 2008ம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி யின் தாக்கம் இன்று அதிக அளவில் பிரதிபலிக்க துவங்கியிருக்கிறது. இந்நிலையில் அதிக ரித்து வரும் சிக்கன நடவ டிக்கையை எளிதாக்கு வோம், புதிய வேலைவாய்ப் புகளை உருவாக்குவோம் என்று புதிய ஜனாதிபதி ஹாலண்டே பிரான்ஸ் மக்களுக்கு வாக்குறுதி அளித்துள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: