புதுதில்லி, ஜூன் 1-ராணுவத்தில் மதத்திற்கோ, அரசிய லுக்கோ இடம் இல்லை; கடந்து போன நிகழ்வுகள் தேவையில்லை என புதிய ராணுவத்தளபதி விக்ரம் சிங் வெள்ளிக்கிழமை கூறினார்.இந்திய ராணுவத்தின் தளபதியாக 26 மாதம் பணியாற்றி மே 31ம் தேதி வி.கே.சிங் ஓய்வுபெற்ற நிலையில், புதிய ராணுவத் தளபதியாக பதவியேற் றுள்ள விக்ரம் சிங் அளித்துள்ள பேட்டியில், காரை செலுத்தும்போது முன்னோக்கித்தான் பார்வை உள்ளது. பின்புறக் கண்ணாடியை பார்த்து வண் டியை ஓட்டுவது இல்லை. கடந்தகால நிகழ்வுகள் தேவை இல்லை என்றார்.சமீபத்தில் நடந்த பிரச்சனைகளை மறந்துவிட வேண்டும் என பாதுகாப் புத்துறை அமைச்சர் ஏ.கே.அந் தோணி ஆலோசனை கூறியது குறித்து கேட்டபோது, ஜெனரல் விக்ரம்சிங் இவ்வாறு கூறினார்.மக்கள் மற்றும் ராணுவத்திற்கு இடையே நெருடலான உறவு இருப் பது குறித்த கேள்விக்கு, பிரச்சனை களை கண்டறிந்து உரிய வழிகாண வேண்டியுள்ளது என்றார்.ராணுவத்தில் அரசியலுக்கோ, மதத்திற்கோ இடம் இல்லை.
இந்த நிலைக்கு தொடர்ந்து முயற்சிப்பேன் என கூறினார். 59 வயது ராணுவத் தள பதி விக்ரம் சிங் 2 ஆண்டுகள் 3 மாத காலம் இந்த தலைமைப்பதவியில் நீடிப்பார்.வடகிழக்கு மாநிலங்களில் போலி என்கவுன்ட்டர் மற்றும் லடாக்கில் அதிகாரிகள்-ஜவான்கள் இடையே மோதல் குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். இந்த வழக்குகள் விதிப்படி கவனிக்கப்படும், எந்த விஷயத்தையும் தரைவிரிப் புக்கு அடியே தள்ளிவிட முடியாது என அவர் தெரிவித்தார்.2010 மார்ச் மாதம் 3 பேர் வட கிழக்குப்பகுதியில் ராணுவத்தின் போலி என்கவுன்ட்டரில் கொல்லப் பட்டனர். இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என ராணுவத் தலை மையகம் அறிவுறுத்தியபோது, நாகா லாந்தை மையமாகக் கொண்ட 3 சப்டி விஷன் படைப்பிரிவு நடவடிக்கை எடுக்கவில்லை என முன்னாள் தளபதி வி.கே.சிங் குற்றம் சாட்டியிருந்தார்.இதுகுறித்து கேட்டபோது, முன்னாள் தளபதி கருத்து குறித்து எந்த விமர்சனமும் செய்யமாட்டேன் என விக்ரம்சிங் கூறினார். நியோமா வில் ஜவான்கள் அதிகாரிகள் மோதல், காங்கோவில் ஐ.நா. கூட்டுப்படையில் உள்ள இந்திய ஜவான்களின் தவறான நடத்தை, நாகாலாந்து போலி என் கவுன்ட்டர் வழக்குகள் விதிமுறைப் படி அணுகப்படும் என புதிய தளபதி விக்ரம் சிங் உறுதியளித்தார். (பிடிஐ)

Leave a Reply

You must be logged in to post a comment.