திருவள்ளூர், ஜூன் 1 –
கவரைப் பேட்டையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மாற்றுச் சான்றி தழ் வாங்க வரும் பிளஸ் 2 மாணவர்களிடம் கட்டா யப்படுத்தி ரூ.50 வசூலீக்கப் படுகிறது. இதற்கு அப்பகுதி பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.திருவள்ளூர் மாவட் டம் கவரைப் பேட்டை மேல்நிலைப் பள்ளியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். மாணவர்க ளின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் இல்லை. இத னால் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைந்துள் ளது. பள்ளியின் வளாகத் தில் மாணவர்களுக்கு போதிய அளவு கழிவறை யில்லை, குடிநீர் பற்றாக் குறையாக உள்ளது. இத னால் மாணவர்கள் குடிநீருக் காக டீகடைகளை தேடி ஓடுகின்றனர்.இந்தநிலையில் கடந்த கல்வியாண்டில் கவரைப் பேட்டையில் மட் டும் 500 மாணவர்கள் பிளஸ் 2 தேர்வு எழுதினார்கள். அவர் களுக்கான தேர்வு முடிவு கள் வந்துள்ளன.
இதனை தொடர்ந்து மாணவர்கள் தங்களின் மாற்றுச் சான்றி தழ் வாங்க சென்றுள்ளனர். அப்போது அனைத்து மாண வர்களிடமும் பள்ளியின் தலைமை ஆசிரியர் இளவர சன் கட்டாயப்படுத்தி தலா ரூ.50 வசூலித்துள்ளார். மேலும் இப்பள்ளியில் அரசு வழங்கும் இலவச புத்தகங்க ளுக்கு காசு வசூலிக்கப்படு கிறது என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.இதுகுறித்து பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தி.மு.சரவணன் என்பவரை கேட்ட போது, கடந்த இரண்டு ஆண்டுகளாக தலைமை ஆசிரியர் பள்ளி மாணவர்களின் ஒழுக்கத் திற்கும், கல்வி வளர்ச்சிக் கும் எந்த வித நடவடிக்கை யும் எடுக்கவில்லை என் றார். தலைமை ஆசிரியரால் பள்ளிக்கு தான் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. மாணவர்களிடம் பணம் வசூலிக்க கூடாது என சொல்லியும் வசூலிப்பதை நிறுத்தவில்லை.
மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிக்கு புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லாததால் பெற்றோர் ஆசிரியர் கழக தலைமை பொறுப்பையும் ராஜீனாமா செய்துள்ளதாக தெரிவித் தார்.மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் நலன் கருதி மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக் கள் எதிர்பார்க்கின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.