வீசும் விசிறி
வோடஃபோன் நிறுவனம் ஹட்சின்சன்-எஸ்ஸார் பங்கு களை வாங்கிய விவகாரத்தில் ரூ.20 ஆயிரத்து 300 கோடி வரு மான வரி சர்ச்சை ஏற்பட்டது. அத னையொட்டி பட்ஜெட் 2012-ல் பின் தேதியிட்டு சில திருத்தங் கள் கொண்டுவரப்படும் என வீராப்பாக அறிவித்தார் பிரணாப் முகர்ஜி. ஆனால் அவர் எழுப்பிய அனலால் அந்நிய முதலீட்டாளர் கள் பாதிக்கப்படக் கூடாதென விசிறி வீசத் துவங்கியுள்ளார். ஏப்ரல் 1, 2012 க்கு முந்தைய வருமானவரிக் கணக்குகள் மீண்டும் திறக்கப்படாது என தற்போது உறுதியளித்துள்ளார்.

வீழும் ரூபாய்
பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என் பார்கள். ஆனால் புதன் கிடைத்தாலும் ரூபாய் சரி வுக்கு விடிவு கிடையாது போலி ருக்கிறது. புதன் கிழமை டால ருக்கு எதிரான ரூபாய் மதிப்பு மேலும் 57 பைசா சரிந்து விட்டது.செவ்வாய், புதன் கிழ மை களில் மட்டும் 106 பைசா வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. ஜூலை 2010ல் யூரோவுக்கு துவங் கிய சரிவு டாலரை நோக்கி இறக்குமதியாளர்களைத் தள் ளியதால் அதற்கு டிமாண்ட் அதிகமாகவே உள்ளது.

போக்கா? வரத்தா?
60 ஆயிரம் கோடி ரூபாய், போக்குவரத்து நெருக்கடியால் இந்தியாவிற்கு ஏற்படும் ஓராண்டு இழப்பாம். ஐ.ஐ.எம் (கொல்கத்தா) நடத்தியுள்ள ஆய்வு தெரிவிக்கிற தகவல் இது. சரக்கு போக்குவரத்து 9.08 சதவிகிதமும், வாகன எண் ணிக்கை 10.76 சதவிகிதமும் அதிகரிக்கிறது.ஆனால் சாலை யோ 4.01 சதவிகிதமே நீள்கிற தாம். இதனால் மும்பை -சென்னை, சென்னை – தில்லி போன்ற முக் கியமான வழித்தடங்களில் கூட மணிக்கு 20 கி.மீ வேகத்திலேயே செல்ல வேண்டியுள்ளதாம். டோல்கேட்டுகளும் தாமதத்தை இன்னும் அதிகரிக்கிறது.

டயோட்டாவின் வருத்தம்
வயிறு எரிகிறது என்றாலும் பெட்ரோலிலா அல்லது டீசலிலா என்று கேட்கிறது ஜப்பானிய டயோட்டா கார் நிறுவனம். பெட் ரோலில் 1 கி.மீக்கு கார் ஓடுவ தென்றால் 5.22 ரூபாய் ஆகிற தாம். டீசலில் அதே தூரத்திற்கு ரூ 2.15 ஆகிறது. எனவே டீச லின் விலையும் கட்டுப்பாடற்ற தாக மாற்றப்பட வேண்டும் என்று டயோட்டா கோரிக்கை வைத்துள் ளது. காரணம், பெட்ரோலில் ஓடும் கார் மாடல்கள் விற்பனை குறைத்துவிட்டதாம். இப்படிச் சொன்னாலும் இன்னொரு புறம் டீசல் மாடல் வாகனங்களை அதிகப்படுத்தவும் அது தயாரா கிறது.

கொசுறு
* சீனாவில் மூன்றாண்டுகளுக்கு முன்பு “ அனைவருக்குமான உடல் நலத்திட்டம்” அறிமுகம் செய்யப்பட்டது. 2003 ல் 29.7 சதவிகிதம் பேர் மருத்துவக் காப்பீட்டைப் பெற்றிருந்தனர். 2011ல் இது 95.7 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. ஆனால் மருத்துவச் செல வினங்களும் கணிசமாக உயர்ந்துள்ளனவாம்.
* ரூ.1000 கோடி விற்பனைக்கு குறைவாக உள்ள பங்குச் சந் தைகளை மூடிவிட வேண்டும் என “செபி” கூறியுள்ளது. இரண் டாண்டுகளுக்குள் மூடப்படாவிட்டால் கட்டாய மூடலுக்கு ஆளாகும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தியா விலுள்ள 16 பிராந்தியப் பங்குச் சந்தைகளில் பெரும்பாலா னவைக்கு பூட்டு போடப்படும் எனத் தெரிகிறது.
* ஐ.சி.ஐ.சி.ஐ-புருடென்சியல் லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனிக்கு ரூ.1.18 கோடி தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. நிறுவன முக வர்களுக்கு முறைகேடாக கமிஷன், அங்கீகரிக்கப்படாத முகவர்கள் மூலம் விற்பனை.
* சந்தை ஆதரவுக்கட்டணம் என்ற பெயரில் நிறுவனங்களுக்கு சலுகை போன்ற குற்றச்சாட்டுகளுக்காகவே இந்தத் தண்டத் தொகையை ஐ.ஆர்.டி.ஏ விதித்துள்ளது. இப்படி வருமானம் பெற்றன. புல்லர்ட்டன் கம்பெனி 1 முகவரை வைத்துக்கொண்டு 259 மையங்களில் வணிகம் செய்துள்ளதாம்.

Leave A Reply

%d bloggers like this: