இடுக்கி, ஜூன் 1 -சிபிஎம் இடுக்கி மாவட்டச் செய லாளர் எம்.எம்.மணி மீது தொடுபுழா காவல்துறை வழக்குப் பதிவு செய் துள்ளது.தொடுபுழாவிற்கு அருகில் உள்ள மணக்காட்டில் நடைபெற்ற கட்சிப் பொதுக்கூட்டத்தில் பேசிய பேச்சிற்கு எதிராக 302, 109, 118 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள் ளது. எம்.எம்.மணிக்கு எதிராக வழக் குப் பதிவு செய்ததைக் கண்டித்து மாவட்டம் முழுவதும் கடந்த திங்க ளன்று கண்டன ஊர்வலங்கள் நடை பெற்றன. ஆட்சி அதிகாரத்தைப் பயன் படுத்தி நெய்யாற்றின்கரை இடைத் தேர்தலில் ஆதாயம் பெறுவதற்காக காங்கிரஸூம் ஐக்கிய ஜனநாயக முன் னணியும் மார்க்சிஸ்ட் கட்சிக்கு எதிராக இத்தகைய சதி வேலைகளைச் செய்து வருகிறது. இதைக் கண்டித்து மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் கண்டன ஊர்வலங்கள் நடைபெற்றன.எம்.எம்.மணி மீது ஜாமீனில் வெளி வர இயலாத பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
காங்கிரஸ் மற்றும் ஐக்கிய ஜனநாயக முன்னணியின் முக்கி யத் தலைவர்களின் நிர்பந்தம் காரண மாக காவல்துறையினர் எம்.எம்.மணி மீது இத்தகைய வழக்குகளைப் பதிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின் றன. இடைத் தேர்தல் நடைபெறு கின்ற சூழ்நிலையில் வழக்கைத் துரிதப் படுத்தவும் முயற்சி மேற்கொள்ளப்படு கிறது. அமைச்சர்களும் முக்கியத் தலைவர்களும் இந்த விசயத்தில் நேரி டையாக தலையிட்டு, அட்வகேட் ஜெனரலின் விசேட அனுமதியைப் பெற்று நடவடிக்கையைத் துரிதப்படுத் தியுள்ளனர்.மலையோர விவசாயிகள், தோட் டத் தொழிலாளர்கள் ஆகியோரின் பல்வேறு உரிமைகளுக்காகவும், அவர் களின் வாழ்க்கைப் பிரச்சனைகளுக் காகவும் பல பத்தாண்டுகளாக பல் வேறு போராட்டங்களை முன்னின்று நடத்தி உரிமைகளைப் பெற்றத் தந்த எம்.எம்.மணி மீது தாக்குதல் தொடுக் கிற இத்தகையப் போக்கிற்கு எதிராக மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளி லும் தங்களின் கடும் எதிர்ப்பைத் தெரி விக்கும் விதமாக எழுச்சி மிகு கண்டன ஊர்வலங்கள் நடத்தினர்.விவசாயிகள், தோட்டத் தொழிலா ளர்கள், விவசாயத் தொழிலாளர்கள், சுமைத் தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள் முதலான சமூகத்தின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த மக்கள் பல்வேறு மையங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றனர். மக்கள் தலைவனை வழக்கில் சிக்க வைப்பதற்கு தீவிரமாக முயற்சிக்கிற வலதுசாரி அரசியல் தலைமைக்கு எதி ராகவும், சிபிஎம்மிற்கு எதிராக அவ தூறு பரப்புகிற ஊடகங்களுக்கு எதி ராகவும் அவர்கள் முழக்கங்கள் எழுப் பினர். ஊர்வலங்களுக்கு மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்களும் வர்க்க வெகு ஜன அமைப்புகளின் தலைவர்களும் தலைமை வகித்தனர்.

Leave A Reply

%d bloggers like this: