திருச்சிராப்பள்ளி, ஜூன் 1-உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி திருச்சியில் புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியை சுகாதாரத் துறை அமைச்சர் வி.எஸ். விஜய் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப் போது அவர் பேசியதாவது:இந்தியாவில் ஒரு வரு டத்திற்கு 9 லட்சம் பேர் புகையிலைக்கு பலியாகிறார் கள். ஒரு நாளொன்றுக்கு சுமார் 2 ஆயிரத்து 500 பேர் இறக்கின்றனர். இதே நிலை நீடித்தால் அடுத்த 20 ஆண் டுகளுக்குள் 20 கோடி மக் கள் இறக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 24 சத வீதம் ஆண்கள் மற்றும் 8 சதவீத பெண்கள் புகை யிலை பொருட்கள் உப யோகிக்கின்றனர். அது மட் டுமில்லாமல், 27 சதவீதம் பேர் புகைப்பவர்களுக்கு அருகில் இருப்பதால் பாதிக் கப்படுகின்றனர். புகையிலை பொருட் களில் 4 ஆயிரம் வகை நச் சுப்பொருட்கள் உள்ளன. இவற்றில் 200 வகையான நச்சுப்பொருட்கள் புற்று நோயை உருவாக்கக் கூடி யன. ஒருவர் ஒரு சிகரெட் டை முழுமையாக பிடித்து முடிக்கும் போது அவரது வாழ்நாளில் 14 நிமிடங்கள் குறைகிறது. புகையிலையை பயன்படுத் துவதன் மூலம் 90 சதவீதம் வாய்ப்புற்று நோயும், புகைக் கும் வரை புகையிலையை பயன்படுத்துவதன் மூலம் 90 சதவீதம் நுரையீரல் புற்று நோயும், இரத்தக்குழாய் பாதிப்பும் ஏற்படுகிறது. புகையிலை பயன் படுத்துவதால் ஆண்கள் இடையே ஆண்மைக்குறை வும், பெண்களிடையே மலட்டுத்தன்மையும் ஏற்படு கிறது. புகைப்பிடிப்பவர் களுக்கு ஏற்படும் பாதிப்பு கள் அனைத்தும் புகைப் பிடிப்பவரின் அருகில் இருப்பவர்களுக்கும் ஏற்படு கிறது. டாக்டர்கள் மற்றும் மருத்துவ சமுதாயத்தை சேர்ந்தவர்கள், பொதுமக் கள் புகையிலை பழக்கத்தை அறவே விட்டுவிட வேண் டும். தமிழக முதல்வர்; இந் தாண்டு மருத்துவத் துறைக்கு ரூ.5 ஆயிரத்து 500 கோடி நிதி ஒதுக்கியுள்ளார். இவ்வாறு அமைச்சர் பேசினார்.இப்பேரணி சத்திரம் பேருந்து நிலையத்திலி ருந்து துவங்கி மாம்பழச் சாலை வரை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, புகை யிலை எதிர்ப்பு விழிப்பு ணர்வு கலை நிகழ்ச்சியை சுகாதாரத்துறை அமைச்சர் சம்மர் பீச்சில் தொடங்கி வைத்தார். இப்பேரணியில் பொது சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் பொற்கை பாண் டியன், சட்டமன்ற உறுப் பினர்கள் மு.பரஞ்ஜோதி, ஆர்.மனோகரன், மாநக ராட்சி மேயர்அ.ஜெயா, துணை மேயர் எம்.ஆசிக் மீரா, துணை இயக்குநர் (சுகாதாரம்) டாக்டர் வை. வீரபாண்டியன் மற்றும் செவிலியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.