இந்தோ – ஆஸி இரட்டையர் அணியான பயஸ் – அலெக்சாண்டர் பெயா இணை இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது. இந்திய அணியான பூபதி-பொப்பண்ணா முதல் சுற்றில் தோற்று வெளியேறியது.பாரீஸ் நகரில் ரோலண்ட் கேர்ரோஸ் மைதானங்களில் பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. பயஸ் – பெயா இணை 6-1, 6-7(2), 6-3 என்ற செட்டுகளில் இத்தாலிய இணையான சைமன் பொலேல்லி – பேபியோ போக்னினி ஆகியோரை தோற்கடித்தனர். பூபதி – பொப்பண்ணா இணை 1-6, 7-5, 6-3 என்ற செட்டுகளில் மார்க் கிக்குவேல்-எட்வர்ட் ரோஜர் வேஸலின் இணையிடம் தோற்றனர்.கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற முதல் ஆசிய மற்றும் சீனப் பெண் நா லி மூன்றாவது சுற்றில் நுழைந்துள்ளார். அவர் ஸ்டெபானி பாரட்ஸ் ககோனை 6-0, 6-2 எனத் தோற்கடித்தார். உலகத்தரவரிசையில் 86ம் இடத்தில் உள்ள ககோனை அவர் 52 நிமிடங்களில் தோற்கடித்தார்.மகளிர் கால் இறுதியில் மரியா சரபோவாவும் கரோலின் வோஸ்னியாக்கியும் மோதும் வாய்ப்பு அதிகரித்து வருகிறது. செரினா வில்லியம்ஸ் வெளியேறியதால் இந்த வாய்ப்பு அதிகரித்துள்ளது. வோஸ்னியாக்கி 6-1, 6-4 என்ற செட்டுகளில் ஜர்மில கஜ் டோசோவாவை தோற்கடித்தார். விம்பிள்டன் சாம்பியன் கேவிடோவா 6-1, 6-3 என்ற புள்ளிகளில் போலந்தின் உர்சுலா ரட்வன்ஸ்காவை தோற்கடித்தார்.ஆடவர் ஒற்றையரில் நாடல் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். நாடலின் 47வது வெற்றி இது. ஸ்பெயின் வீரரான நாடல் 6-2, 6-2, 6-0 என்ற செட்டுகளில் உஸ்பெகிஸ்தான் வீரர் டெனிஸ் இஸ்டோமின் என்பவரை தோற்கடித்தார். நாடல் ஆறு பிரெஞ்ச் ஓபன் பட்டங்களை வென் றுள்ளார். இச்சாதனையை அவர் ஜோர்ன் போர்க் உடன் பகிர்ந்து கொண்டுள் ளார். ஏழாவது முறையாக நாடல் பிரெஞ்ச் ஓபன் பட் டத்தை வென்றால் அவர் புதிய சாதனை படைப்பார்.ஜர்க்கோ நீமினன் பிரிட்டனின் ஆன்டி மர்ரேயிடம் 1-6, 6-4, 6-1, 6-2 என்ற செட்டுகளில் தோற்றார். கால் வலியால் அவதிப்பட்ட மர்ரே போட்டியிலிருந்து விலகலாமா என ஆலோசித்தார். பின்னர் களமிறங்கி வென்றார். பிரான்சின் ஜோ-வில்பிரட் டிசோங்கா, ஸ்பெயினின் டேவிட் பெர்ரரும் மூன்றாவது செட்டில் ஆடவுள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: