சென்னை, ஜூன் 1 –
சென்னை பெரியமேட் டில் அறிவிக்கபடாத தொடர் மின் வெட்டை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தலை மையில் பொதுமக்கள் வியாழனன்று (மே31) முற் றுகை போராட்டம் நடை பெற்றது.பெரியமேடு 58வது வட் டத்தில் கடந்த சில நாட்க ளாக அறிவிக்கபடாத தொடர் மின்வெட்டு ஏற் படுகிறது. பழைய மின் கேபிள் ஒயர் பராமரிக்க படாததே இதற்கு காரணம் என மின்ஊழியர்கள் தெரி வித்தனர் இதையொட்டி பொதுமக்கள் தினத்தந்தி அலுவலகம் அருகிலுள்ள மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இப் போராட்டத்திற்கு வாலி பர் சங்க பகுதி செயலாளர் ரஞ்சித் தலைமை தாங்கி னார் சதிஷ், சுந்தர், தினேஷ், சிபிஎம் பகுதி செயலாளர் ஆர்.சரளா, ராமமூர்த்தி உள் ளிட்ட பலர் பங்கேற்றனர்.
ஸ்டர்லிங் ஹாலிடே ரிசார்ட்ஸ் வருவாய் அதிகரிப்பு
சென்னை, ஜூன் 1-
இந்தியாவில் உள்ள ஓய்வில்லம் துறையில் முன் னணியில் உள்ள ஸ்டர்லிங் ஹாலிடே ரிசார்ட் லிமி டெட் நிறுவனம் 2012ல் நான்காவது காலாண்டில் வருமானம் அதிகரித்துள் ளது.மொத்த செயல்வருமா னம் ரூ.27கோடியே 80 லட் சமாகும். இது கடந்த ஆண்டு வருமானமான ரூ.12 கோடியே 3லட்சத்தை விட 118.4 விழுக்காடு அதிகமா கும். 2012 ஆம் நிதியாண் டின் மொத்த செயல் வரு மானம் ரூ.77கோடியே 43 லட்சமாகும். இது கடந்த ஆண்டை விட 76.2 விழுக் காடு அதிகமாகும்.இந்த நிதியாண்டில் தேக் கடி, கார்வார், கார்பெட், கோவாவில் இரண்டாவது ரிசாட்டுகளை திறந்தது. இதை யடுத்து மொத்த ரிசார்ட்டுகளின் எண் ணிக்கை 18 ஆக உயர்ந்துள் ளது என்று ஸ்டர்லிங் ஹாலிடே ரிசார்ட்ஸ் தலை வர் சித்தார்த் மேத்தா ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித் துள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: