திருவாரூர், ஜூன் 1 -மத்தியில் ஆளும் ஐக்கிய முற் போக்கு கூட்டணி அரசும், மாநிலத் தில் ஆளும் அதிமுக அரசும் தொடர்ந்து தொழிலாளர் நலன்களை புறக்கணித்து வருகின்றன என சிஐடியு மாநிலத் தலைவர் ஆர்.சிங்காரவேலு குற்றம் சாட்டினார்.சிஐடியு 50ஆம் ஆண்டு அமைப்பு தின கூட்டத்தில் பங்கேற்பதற்காக திருவாரூர் வருகை தந்த அவர் செய்தி யாளர்களிடம் பேசும்போது மேற் கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:கடந்த பிப்ரவரி மாதம் 28ஆம் தேதியன்று நாடு முழுவதும் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட சிஐடியு உள்ளிட்ட 11 தொழிற்சங்கங்களின் தலைமையில் சுமார் 10 கோடி தொழி லாளர்கள் 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து வேலைநிறுத்தம் செய்த னர். முறைசாரா தொழிலாளர் தொடங்கி வங்கி, இன்சூரன்ஸ், பொதுத்துறை நிறுவனங்கள் உள் ளிட்டவற்றில் பணியாற்றும் தொழி லாளர்கள் வரை இதில் ஈடுபட்டனர். ஆனால் மத்திய அரசு இதுவரை நாடு கண்டிராத இந்த வேலைநிறுத்தத் தினை உதாசீனப்படுத்திவிட்டது. பொதுத்துறை வங்கிகளை அந்நிய பகாசுர கம்பெனிகளுக்கு தாரை வார்க் கத் துடிக்கிறது. பெருமுதலாளிகளுக்கு 5,28,000 கோடி ரூபாய் வரிச்சலுகை யை அறிவிக்கும் மத்திய அரசு, தொழிலாளர் நலனுக்காக ஒரு பைசா கூட செலவு செய்ய வில்லை. தொழி லாளர் வைப்பு நிதியின் வட்டி விகிதத் தை குறைத்துள்ளது. மத்திய அரசின் இத்தகைய தொழிலாளர் விரோத போக்கை சிஐடியு கடுமையாக எதிர்க் கிறது. சிஐடியு அகில இந்திய பொதுக் குழு கூட்டம் வரும் ஜூன் 2ஆம் தேதி தொடங்கி 6ஆம் தேதி வரை கோவை யில் நடைபெறும். இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்றார்.
தொழிலாளர் நலன்
தமிழக அரசும், மத்திய அரசைப் போலவே தொழிலாளர் நலன்களை முற்றிலுமாக புறக்கணிக்கின்றது. தொழிலாளர் நலச்சட்டங்கள் அமலாக்கப்பட வேண்டியது குறித்து சட்டமன்றத்தில் நாகை மாலி எம்எல்ஏ உள்ளிட்டோர் பேசினர். அதற்கு பதிலளித்த தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.த.செல்ல பாண்டியன் 13 திரைப்படப் பாடல் களைப் பாடி மானியக் கோரிக்கையில் தனது உரையை முடித்துக்கொண்டு விட்டார். 110விதியின் கீழ் எடுத்ததற் கெல்லாம் சட்டமன்றத்தில் அறிவிப்பு களை வெளியிட்ட தமிழக முதலமைச்சர் அதே 110 விதியின் கீழ் தொழிலாளர்கள் நலனுக்கென்று எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
நலவாரியங்கள்
லட்சக்கணக்கான தொழிலாளர் கள் நல வாரியங்களில் பதிவு செய் துள்ளனர். இதில் பணப்பயன்களை அதிகப்படுத்த வேண்டும் என நீண்ட காலமாக போராடி வருகின்றனர். மாநில அளவிலான தொழிலாளர் ஆலோசனைக்கமிட்டிகள், காண்ட் ராக்ட் லேபர் ஆலோசனைக் கமிட்டி கள் கூடுவதே இல்லை. இப்படி இருந் தால் தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச் சனைகள் பற்றி எவ்வாறு அரசு முடி வெடுக்க முடியும். நலவாரியப் பலன் களைப் பெற எளிமையான வழிமுறை களை அரசு கொண்டு வர வேண்டும். என்எல்சி தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தினை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு தலையிட வேண்டும். மாநில அரசும் அதற்கான முயற்சி களை எடுக்க வேண்டும். இவ்வாறு ஆர்.சிங்காரவேலு தெரி வித்தார்.பேட்டியின் போது சிஐடியு மாவட்டச் செயலாளர் நா.பாலசுப்பிர மணியன், தலைவர் ஜி.பழனிவேல், நிர்வாகி எம்.பி.கே.பாண்டியன் ஆகி யோர் உடன் இருந்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.