ஹைதராபாத், ஜூன் 1 -பெல்லாரி சுரங்க ஊழலில் சிக்கி சிறையில் உள்ள கர்நாடக மாநில முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டியை ஜாமீனில் விட, ரூ.5 கோடி லஞ்சம் வாங்கியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள நீதிபதி டி.பட்டாபிராமாராவை ஆந்திரா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மதன் லாகூர் சஸ்பெண்ட் செய்தார்.ஓபுளாபுரம், சட்டவிரோத சுரங்க வழக்கில் ஜனார்த்தன ரெட்டிக்கு 2012, மே 12 அன்று நீதிபதி ராமராவ் ஜாமீன் அளித்தார். இருப்பினும் சட்டவிரோத சுரங்க நிறுவன வழக்கில் ஜாமீன் பெற முடியாமல் முன்னாள் கர்நாடக அமைச்சர் பெங்களூரில் காவலில் உள்ளார்.ஓபுளாபுரம் வழக்கில், ரெட்டிக்கு ஜாமீன் அளிக்கப்பட்டது குறித்து பலருக்கும் ஆச்சரியம் ஏற்பட்டது.ஜாமீன் விவகாரத்தில் லஞ்சம் தரப்பட்டதாகவும் புகார்கள் எழுந்தன. இந்த நிலையில் நீதிபதி ராமாராவ் மீது மத்திய புலனாய்வு கழகம் (சிபிஐ) விசாரணையைத் துவக்கி உள்ளது. அந்த விசாரணையின் போது நீதிபதிக்கு ஜனார்த்தன ரெட்டி, ரூ.5 கோடி தரப்பட்டிருப்பதையும் கண்டுபிடித்தது.ஆந்திர ஜோதி நாளிதழ் தகவல்படி, ராமாராவ் மகனின் லாக் கரில் பணம் பதுக்கி வைத்து இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள் ளது. இதரத் தொகை மற்றொரு இடத்தில் வைக்கப்பட்டிருந்தது.லஞ்சம் பெற்ற ஆதாரங்களை சேகரித்த சிபிஐ, ஆந்திர உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியை சந்தித்தது.பின்னர் சிபிஐ லாக்கரை திறந்து லஞ்சப் பணத்தை பறிமுதல் செய்தது. இதையடுத்து லஞ்ச வழக்கில் சிக்கிய நீதிபதி ராமாராவ் சஸ்பெண்ட் ஆனார்.

Leave A Reply

%d bloggers like this: