ஒரு நாள் போட்டிகளில் பீட்டர்சன் ஓய்வு
இங்கிலாந்து கிரிக்கெட் ஆட்டக்காரர் கெவின் பீட்டர்சன் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்த அறிவிப்பால் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் அமைப்பு ஆச்சரியம் அடைந்துள்ளது. ஆனால் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து ஆட விரும்புவதாக அவர் அறிவித்தார். 2015 உலகக்கோப்பை அணியில் இடம்பெற விரும்பும் இளைய தலைமுறை வீரர்கள் தங்கள் இடத்தை உறுதிப்படுத்திக்கொள்ள உதவுவதற்காக இம்முடிவை எடுத்ததாக அவர் அறிவித்தார். செப்டம்பரில் இருபது 20 உலகக்கோப்பை போட்டிகள் தொடங்கவுள்ள சூழலில் அவர் இம்முடிவை அறிவித்துள்ளார். 32 வயதில் சர்வதேச அட்டவணைப்படி ஆடுவதும், தனது உடலின் மீது ஏற்படும் கட்டாயங்களும் அதிகமாகிவிட்டதால் ஓய்வுபெற இது சரியான தருணம் என்று கருதுவதாக அவர் கூறினார்

சாம்பியன் லீக் போட்டி தெ.ஆப்பிரிக்காவிற்கு மாற்றம்
இந்தியாவில் நடத்ததிட்டமிடப்பட்டுஇருந்த சாம்பியன் லீக் இருபது 20 கிரிக்கெட் போட்டிகள் தென் ஆப்பிரிக்காவுக்கு மாற்றப்பட்டுள்ளது. கட்டமைப்பு, போக்குவரத்து ஆகியவை இடமாற்றத்துக்கு காரணமாகக் கூறப்படுகின்றன. சாம்பியன் லீக் நிர்வாகக் குழுக்கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது. நான்கு இந்திய அணிகளும், தென் ஆப்பிரிக்கா, மேற்கு இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இருந்து தலா ஒரு அணியும் ஆக மொத்தம் எட்டு அணிகள் சாம்பியன் லீக் இருபது 20 போட்டிகளில்பங்கேற்கும். போட்டிகள் அக்டோபரில் நடைபெறும்.

Leave A Reply

%d bloggers like this: