மாற்றுத்திறனாளிகள் சங்க தலைஞாயிறு ஒன்றிய கூட்டம்
நாகப்பட்டினம், ஜூன் 1 -மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் நலச்சங்கத்தின் கூட்டம், செவ்வாய்க்கிழமையன்று, நீர் முளை நிலொபர் திருமண மண்டபத்தில் தலைஞாயிறு ஒன்றியத்தில் நடைபெற்றது.ஊராட்சி மன்றத் தலைவர் என்.செய்யது உசேன், கூட் டத்திற்குத் தலைமை வகித்தார். மாவட்டத் துணைத் தலை வர் எஸ்.எம்.கே.பெருமாள், ஒன்றியத் தலைவர் வி.எஸ். நாகேந்திரன், ஏ.சொக்கலிங்கம், ஏ.ராஜேந்திரன், ஏ.சகா யம், எம்.மகாலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கத்தின் ஒன்றியச் செயலாளர் கே.அலெக்சாண்டர் வரவேற்புரையாற்றினார்.கும்பகோணம் ‘லேன்கோ ஃபார் ஃபவுண்டேசன்’ அமைப் பின் சார்பில், ஜி.சதீஸ், என்.ஆர்.குமார், ஏ.ரமேஷ், ரபேல்ராஜூ, எஸ்.ரஞ்சித் குமார் ஆகியோர் கூட்டத்தில் கருத்துரை வழங் கினர். அப்போது கும்பகோணத்தில் இயங்கி வரும் தங்கள் அமைப்பின் சார்பில், இன்னும் ஒரு மாதத்திற்குள், தலைஞாயிறு ஒன்றிய மாற்றுத் திறனாளி களுக்கு செயற்கைக் கை, கால்கள் அளிக்கப்படும் என்று அவர்கள் உறுதியளித்தனர்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைஞாயிறு ஒன்றியச் செயலாளர் ஏ.வேணு, எஸ்.முருகேசன் ஆகியோர் வாழ்த்துரை வழ்ங்கினர். எம்.நத்தர்கனி நன்றி கூறினார். 100-க்கு மேற்பட் டோர் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர், ஜூன் 1-பெட்ரோல்விலையை உயர்த்திய மத்திய அரசைக் கண்டித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் வியா ழனன்று தமிழகம் முழு வதும் ஆர்ப்பாட்டம் நடத் தினர். தஞ்சை பனகல் கட்டி டம் முன்பு நடந்த ஆர்ப் பாட்டத்திற்கு வட்டத் தலைவர் தி.இரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் எஸ்.கோதண்டபாணி கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.மாவட்டச் செயலாளர் இரா. பன்னீர்செல்வம் கண் டன உரையாற்றினார். வட் டச் செயலாளர் ஜி.சண் முகம் நன்றி கூறினார்.

Leave A Reply

%d bloggers like this: