சிறப்பு மனுநீதி முகாம்
முசிறி, ஜூன் 1 -தா.பேட்டையை அடுத்த வாளசிராமணி கிராமத்தில் சிறப்பு மனு நீதி முகாம் நிறைவுநாள் விழா நடைபெற்றது. திருச்சி மாவட்ட வரு வாய் அலுவலர் தியாக ராஜன் தலைமை வகித்தார். முசிறி கோட்டாட்சியர் ஜெயசீலா, வட்டாட்சியர் மனோகரன், ஒன்றியக் குழுத்தலைவர் செல்வ ராஜ், மாவட்டக் கவுன் சிலர் நெடுமாறன், ஊராட் சித் தலைவர் கனகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நலிந்தோர் நலத்திட்ட தனி வட்டாட் சியர் குளத்தூர் பாண்டி யன் வரவேற்றார்.முகாமில் பொதுமக் களிடமிருந்து 135 மனுக் கள் பெறப்பட்டு 42 மனுக் களுக்கு உடன் தீர்வு காணப் பட்டது. 93 மனுக்கள் துறை சார்ந்த அலுவலர் களின் விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட் டது. மேலும் பட்டாநகல் 10 நபர்களுக்கும், நத்தம் பட்டா நகல் 12 நபர்க ளுக்கும், புதிய குடும்ப அட்டை 10 நபர்களுக்கும், விதவை உதவித் தொகை 4 நபர்களுக்கும், ஊனமுற் றோர் உதவித்தொகை 5 நபர்களுக்கும், வேளாண் மைத் துறையின் சார்பில் 2 விவசாயிகளுக்கு கைத் தெளிப்பான்களும் வழங் கப்பட்டன. மண்டல துணை வட் டாட்சியர் பாலசேகர், வட்ட வழங்கல் அலுவ லர் ராஜசேகரன், வருவாய் ஆய்வாளர் மோகன், கிராம நிர்வாக அலுவலர் பத்ம நாபன் மற்றும் பொது மக்கள் பலர் பங்கேற்றனர்.

டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாம்
முசிறி, ஜூன் 1 -முசிறி தேர்வுநிலை பேரூராட்சி பகுதியில் டெங்கு காய்ச்சல் பரவா மல் தடுப்பதற்கான விழிப் புணர்வு முகாம் நடை பெற்றது. பேரூராட்சித் தலைவர் மாணிக்கம் தலைமை வகித்தார். துணைத்தலை வர் பேங்க் ராமசாமி, பொது சுகாதார ஆய்வாளர் புவ னேஸ்வரி ஆகியோர் முன் னிலை வகித்தனர். பேரூ ராட்சி செயல் அலுவலர் முத்துகுமார் சிறப்புரை யாற்றினார். பொதுமக்கள் தங்கள் வீடுகளில் உள்ள நச்சு தடை தொட்டியை கித்தான் சாக்கு அல்லது கொசு தடுப்பு சாதனங்கள் மூலம் மூடி வைக்க வேண் டும், வீடுகளில் உடைந்த பிளாஸ்டிக், டயர் மற்றும் ஆட்டுக்கல் ஆகியவற்றில் தண்ணீர் தேங்காமல் பார்த் துக் கொள்ள வேண்டும்; தலைவலி அல்லது உடல் வலியுடன் கூடிய காய்ச் சல் இருந்தாலோ அல்லது விட்டு விட்டு காய்ச்சல் வந்தாலோ உடனடியாக மருத்துவரை அணுக வேண் டும்; பேரூராட்சி மூலம் வழங்கப்படும் குளோரி னேஸன் செய்த குடிநீரை குடிக்க வேண்டும் என்று செயல் அலுவலர் கேட்டுக் கொண்டார்.

டெங்கு காய்ச்சலுக்கு 2 வயது குழந்தை பலி
திருநெல்வேலி,ஜூன் 1 -நெல்லையில் டெங்கு காய்ச்சலுக்கு 2 வயது குழந்தை பலியாகியுள் ளது. டெங்கு காய்ச்சல் நோய் அறிகுறியுடன் கீழக் கல்லூர், பேட்டையைச் சேர்ந்த முருகன் என்பவ ரின் மகள் மணீஷா(2) , திரு நெல்வேலி மருத்து வக் கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி வெள்ளியன்று இறந்தார்.இதனைத் தொடர்ந்து டெங்கு காய்ச் சலுக்கு பலியானவர்களின் எண் ணிக்கை 53 ஆக உயர்ந் துள்ளது.எனினும் சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறு கையில், மணீஷா , நிமோ னியா காய்ச்சல் காரண மாக இறந்ததாக கூறுகின் றனர்.

Leave A Reply

%d bloggers like this: