டாக்கா – சில்ச்சார் பேருந்து சேவை
சில்ச்சார், ஜூன் 1-வங்கதேசத் தலைநக ருக்கும் அசாமில் உள்ள சில்ச்சாருக்கும் இடையில் விரைவில் பேருந்து சேவை தொடங்கும் என்று அசாம் மாநில மூத்த அமைச்சர் கௌ தம் ராய் கூறினார்.கௌதம் தனிப்பட்ட சொந்த வேலையாக வங்க தேசம் சென்றுள்ளார். அவர் தொலைபேசியில் பிடிஐ செய்தி நிறுவனத்தி டம் “வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா, சில்ச்சாருக் கும் டாக்காவுக்கும் இடை யில் பேருந்து சேவையைத் தொடங்க முயற்சி எடுப் பார்” என்று கூறினார்.அவர் வியாழனன்று வங்கதேசப் பிரதமரைச் சந்தித்தார். திரிபுராவில் உள்ள மகிசாசனுக்கும் வங் கதேசத்தில் உள்ள குலாரா வுக்கும் இடையில் உள்ள எல் லை வழியாக வர்த்தகத் தைத் தொடங்க ஹசீனா விரும்புகிறார் என்றும் அவர் சொன்னார்.

ரண்வீர் சேனா தலைவர் கொலை
ஆரா, ஜூன் 1-பீகாரில் தாழ்த்தப்பட் டோருக்கு எதிராக இயங் கிவரும் ரண்வீர் சேனா வின் தலைவர் பிரம்மேஸ் வர் சிங் அடையாளம் தெரி யாத நபர்களால் வெள்ளி யன்று அதிகாலையில் சுட்டுக்கொல்லப்பட்டார். ஆரா நகரில் 24 மணிநேர தடையுத்தரவு பிறப்பிக் கப்பட்டுள்ளது.கடிரா மொகல்லா கிராமத்தில் காலையில் நடைபயிற்சியில் ஈடுபட் டிருந்த பிரம்மேஸ்வரை அடையாளம் தெரியாத துப்பாக்கி கொலையாளி கள் சுற்றிவளைத்து சரமா ரியாகச் சுட்டுக்கொன்ற னர். முக்கியாஜி என்று அழைக்கப்படும் பிரம் மேஸ்வர் சிங் பல உயிர் எரிப்புச் சம்பவங்கள் தொடர்பாக ஆயுள் தண் டனை விதிக்கப்பட்டார். மேல் நீதிமன்றங்களால் விடுவிக்கப்பட்ட அவர் ஏப்ரல் மாதத்தில் சிறையில் இருந்து விடுதலையானார்.உயர்சாதி நிலப் பிரபுக்களின் தனிப்பட்ட கூலிப்படையான ரண்வீர் சேனாவின் தலைவர் பிரம் மேஸ்வர் சிங் மீது டிசம்பர் 96ல் 61 தலித்துகளை உயி ருடன் எரித்த வழக்கு, ஜகானாபாத், அவுரங்கா பாத், நவாடா ஆகிய இடங் களில் நடைபெற்ற உயிர் எரிப்பு வழக்குகள் ஆகிய வை விசாரணையில் உள்ளன.

முன்னாள் அமைச்சர் மீது விசாரணை
லக்னோ, ஜூன் 1-மாநில லோக் அயுக்தா அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில் முன் னாள் எரிசக்தி அமைச்சர் ராம்வீர் உபாத்யாயா மீது நிதிமோசடி குறித்த தனிப் பட்ட விசாரணைகளுக்கு உத்தரப்பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.லோக் அயுக்தாவின் பரிந்துரைகளை அரசு ஏற் றுக்கொண்டுவிட்டது. அதற்குரிய அதிகாரப்பூர்வ தகவலும் கிடைத்துவிட் டது என்று லோக் அயுக்தா நீதிபதி மெஹ்ரோத்ரா கூறி னார். மாயாவதி அரசில் எரிசக்தி அமைச்சராக இருந்த உபாத்யாயா மீது அளிக்கப்பட்ட புகார்கள் மீது லோக் அயுக்தா நான்கு பரிந்துரைகளை அளித் துள்ளது என்றும் அவர் சொன்னார்.ஹத்ராஸ் மாவட் டத்தில் அளிக்கப்பட்ட ஒப்பந்தங்களை குறித்து தொழில்நுட்ப ஆலோ சனைக் குழுவின் விசா ரணைக்கு அனுப்ப வேண் டுமென்ற பரிந்துரையை யும் அரசு ஏற்றுக்கொண் டுள்ளது என்றும் அவர் கூறினார்.

தீவிரவாதிகளின் பதுங்கு குழி முறியடிப்பு
ஸ்ரீநகர், ஜூன் 1-வடக்கு காஷ்மீர் பண்டி போர் மாவட்டத்தில் உள்ள காடுகளில் தீவிரவாதிகள் மறைந்து வாழ்ந்த இடத் தைக் காவல் துறையினர் கண்டுபிடித்தனர். அங்கி ருந்த ஏராளமான ஆயுதங் களும் வெடி பொருட்க ளும் கைப்பற்றப்பட்டன.

Leave A Reply

%d bloggers like this: