திண்டிவனம் அருகே விபத்து : வாலிபர் சங்க தலைவர் அகால மரணம்
சென்னை, ஜூன் 1 -விழுப்புரம் மாவட்டத்தில் நேர்ந்த விபத்தில் வாலிபர் சங்கத்தின் தலைவர் களில் ஒருவரான தோழர் மு.கோபால கிருஷ்ணன் அகால மரணமடைந்தார்.அவரது மறைவுக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக்குழு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளது. சங்கத்தின் மாநிலத் தலைவர் செ.முத்துக் கண்ணன், செயலாளர் ஆர்.வேல்முருகன் ஆகியோர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு:இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் முன்னணி ஊழியராகவும், விழுப்புரம் மாவட்ட மக்களால் நன்கு அறியப்பட்ட வாலிபர் சங்கத் தலைவரும், அடிப்படை பிரச்சனைகளுக்காக மக்களுடன் கை கோர்த்து நின்று போராடிய வாலிபர் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினரும் விழுப்புரம் மாவட்டப் பொருளாளரு மான தோழர் மு.கோபாலகிருஷ்ணன் ஜூன் 1 வெள்ளியன்று மாலை 3மணிக்கு திண்டிவனம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் மரணமடைந்து நம்மையெல் லாம் விட்டுப் பிரிந்துள்ளார். தோழரது மறைவால் வாடும் அவரது மனைவி மாலதி அவர்களுக்கும் தந்தையை இழந்து தவிக்கும் குழந்தைகள் தேசப் பிரியா, ஜோதிபாசு ஆகியோருக்கும், பெற்றோர் முருகேசன், நாச்சியம்மாள் ஆகியோருக்கும், விழுப்புரம் மாவட்டக் குழுவிற்கும் சங்கத்தின் மாநிலக்குழுவின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித் துக்கொள்கிறோம். மேலும் தோழர் கோபாலகிருஷ்ணன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதத்தில் மாநிலம் முழுவதும் வாலிபர் சங்க கொடி களை ஒரு நாள் அரைக்கம்பத்தில் பறக்க விடவும் வேண்டுகிறோம்.

தீக்கதிரில் வெளியான கி.இலக்குவன் கட்டுரைக்கு விருது
தீக்கதிர் கட்டுரையாளர் தோழர் கி.இலக்குவன் எழுதி 2011 செப்டம்பர் 9ந்தேதியன்று தீக்கதிரில் ஏகாதிபத்தியத் தின் எண்ணெய் அரசியல் என்ற தலைப் பில் வெளிவந்த கட்டுரையை சின்னக் குத்தூசி நினைவு அறக்கட்டளை சிறந்த கட்டுரையாகத் தேர்வு செய்துள்ளது. 2011ம் ஆண்டில் நாளிதழ்கள், பருவ இதழ்கள் போன்றவற்றில் வெளியான சிறந்த மூன்று கட்டுரைகளுள் ஒன்றாக இதனை அது தேர்வு செதுள்ளது. விரு துத் தொகையாக ரூ. 10000 வழங்கப் படுகிறது. விருது வழங்கும் விழா சென் னை தேவநேயப்பாவாணர் அரங்கில் 15-06-2012 அன்று நடைபெறுகிறது.

Leave A Reply

%d bloggers like this: