(மகாராஷ்டிரா), ஜூன் 1-ஊழலை ஒழிப்பதற்கு மத்திய அரசு உரிய நட வடிக்கை எடுக்காதது குறித்து அதிருப்தி அடைந் துள்ள அன்னாஹசாரே, பிரதமர் மன்மோகன்சிங் மீது வைத்திருந்த நம்பிக் கையை இழந்துவிட்டேன் என்றார். மக்களின் 90 சதவீத பொதுப்பணத்தை தலை வர்கள், அதிகாரிகள் சூறை யாடுவதாகவும் அவர் தெரி வித்தார்.ரத்னகிரிக்கு வருகை தந்த ஹசாரே கூறுகையில் பிரதமர் மன்மோகன்சிங் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தேன். தற்போது, அவர் மீது எனக்கு நம்பிக் கை இல்லை. நல்ல நடத்தை யுடன் உள்ள நபர்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும். அப்போதுதான் மாற்றம் வரும் என்றார்.கடந்த 65 ஆண்டுகளில் மக்களவை அல்லது மாநி லங்களவையில் பொது நலன் கருதி ஒரு சட்டம்கூட நிறைவேறவில்லை என் றும் அவர் கூறினார். பெரும் பாலானவர்கள் ஊழலில் தொடர்புள்ளவர்களாக உள்ளனர். பொது மக்கள் தகவல் விவரம் பெறாத நிலை யில் அதனை சாதகமாக பயன்படுத்தி, நியாய மற்ற பலனை பெறுகிறார்கள். பொதுமக்களின் பெரும் பாலான பணம் அரசியல் தலைவர்களாலும் அரசு அதிகாரிகளாலும் ஊழல் செயல்பாடுகளுக்காக பயன்படுத்தப்படுகிறது. 10 சதவீத பொதுப் பணம்தான் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு பயன்படுத் தப்படுகிறது. இந்த சூழ் நிலையில் நாட்டின் முன் னேற்றத்தை எப்படி பார்ப் பது என்றும் அவர் கேள்வி எழுப்பினார். வலிமையான லோக்பால் மசோதாவை கொண்டுவருவதற்கான பிரச்சாரத்தை ஹசாரே, மகாராஷ்டிராவில் மேற் கொண்டுள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: