சென்னை, ஜூன் 1 –
சென்னை மாநகராட்சி 171வது வட்டம், சூரியா நகருக்கு தெருக்குழாய் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வரு கிறது. அப்பகுதியில் கடந்த 10 நாட்களாக குடிநீர் நிறுத் தப்பட்டுள்ளது.இந்நிலையில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சைதாப்பேட்டை பகுதிச் செயலாளர் டி.சி.கே.சுந்த ரம் தலைமையில் பகுதிக் குழு உறுப்பினர் கிரி, வட் டச் செயலாளர் எப். ஜெரோம், ராஜேந்திரன் (கட்டுமானம்), பூஞ்சோலை (மாதர் சங்கம்) ஆகியோர் சைதாப்பேட்டையில் உள்ள மெட்ரோ வாட்டர் அலுவலகத்திற்கு சென்று அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.இதனையடுத்து இரண்டு தினங்களுக்கு லாரிகள் மூலம் குடிநீர் வழங்கப்படும், அதன்பிறகு மீண்டும் குழாய் மூலம் குடிநீர் வழங்கப் படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
கேஜி பவுண்டேஷன்ஸ் குடியிருப்பு அறிமுக சலுகை
சென்னை, ஜூன் 1 –
சென்னையில் உள்ள முக்கியமான கட்டுமான நிறுவனமான கேஜி பவுண் டேஷன்ஸ் பூந்தமல்லி அருகே கேஜி செண்டர் பாயிண்ட் என்ற புதிய குடி யிருப்பு திட்டத்தை ஜூன் 2 அன்று துவங்குகிறது.சுமார் 7.2 ஏக்கர் நிலத் தில் 5.5 லட்சம் பரப்பள வில் அமையவிருக்கும் இந்த கட்டுமானத் திட்டத்தில் 515 முதல் 1295 சதுரஅடி கொண்ட 2 மற்றும் 3 படுக் கைகள் கொண்ட 649 குடி யிருப்புகள் அமையவுள்ளன. 25 அடுக்குமாடி குடியிருப்பு களுக்கான அறிமுகச் சலுகை ரூ.2999 ஆகும். இந்த கட்டுமான திட்டத்திற் கான முதலீடு ரூ.100 கோடி ஆகும். நெரிசல் மிக்க சென்னை நகரில் இருந்து அமைதியான இடத்தில் குடி யிருக்க விரும்பும் மக்களுக் காக இந்த குடியிருப்பு அமைக்கப்படுவதாகவும் அனைத்து வசதிகளுடன் இந்த திட்டம் அமைய உள்ள தாகவும் கேஜி பவுண்டே ஷன் செய்திக்குறிப்பு தெரி விக்கிறது.

Leave A Reply

%d bloggers like this: