கசப்புடன் கூட்டணியில் நீடிப்போம் – திமுக தலைவர் கருணாநிதி.ச.சா – நாடாளுமன்றத் தேர்தல்ல கூடுதல் கசப்ப மக்களே தருவாங்க…?
* * *
தனியார் துறைக்கு நிலக்கரி வயல்கள் ஒதுக்கப்பட்டதால் தான் உற்பத்தி பெருகியது – மத்திய அமைச்சர் ஸ்ரீ பிரகாஷ் ஜெய்ஸ்வால்.ச.சா – உற்பத்தி பெருகுச்சு… அரசுக்கு வர வேண்டிய வருமானமெல்லாம் போச்சே…?
* * *
தாத்ரா வாகனம் வாங்க முன்னாள் ராணுவ உயர் அதி காரி தேஜிந்தர் சிங் ரூ.14 கோடி கொடுக்க முயன்றது பற்றி ஜெனரல் வி.கே.சிங் கருத்து தெரிவிக்க மறுப்பு – செய்தி ச.சா – முக்கியமான பிரச்சனைல கருத்து சொல்லாம இருந்தா எப்படி…?
* * *
வரி வழக்குகள் தொடர்பான முறையீட்டு நடவடிக்கையால் சுமார் 2.4 லட்சம் கோடி ரூபாய் வசூலிக்கப்படவில்லை- மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி.ச.சா – எல்லாமே லட்சம் கோடிகளில் தான் நடக்குது…!

Leave A Reply

%d bloggers like this: