புதுதில்லி, ஜூன் 1-அயல்நாட்டு கல்வி நிறு வனங்களை பின்புற வாசல் வழியாக அனுமதிப்பதற்கு மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் தற் போது முயற்சிக்கிறது. அயல்நாட்டு கல்வி நிறுவ னங்கள் (நுழைவு கட்டுப் பாடு மற்றும் செயல்பாடு) மசோதா-2010 மாநிலங்கள வையில் நிறைவேறுவது உறுதியற்ற நிலையில், மத் தியஅரசு புதிய தந்திரத்தை கையாளத் துவங்கி இருக் கிறது.அயல்நாட்டு கல்வி நிறு வனங்களை முறைப்படுத்து தல் மற்றும் அனுமதித்தல் தொடர்பாக, தற்போது செயல்பாட்டில் உள்ள சட் டங்களில் உள்ள சாத்தியக் கூறுகளை அடையாளம் காண, பல்கலைக்கழக மானியக் குழுவை (யுஜிசி) அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.தற்போது உள்ள சட் டங்களின்படி 2 சாத்தியக் கூறுகளால் அயல்நாட்டு கல்வி நிறுவனங்கள் வர வாய்ப்பு உள்ளன. அந்த நிறு வனங்கள்-யுஜிசி சட்டம் 1956 பிரிவு 3ன்படி, தன் னாட்சி பல்கலைக்கழகங்க ளாக இந்தியாவுக்குள் வர முடியும்.
அல்லது மாநில சட்டவிதிப்படி தனியார் பல்கலைக்கழகங்களாக, இந்தியாவில் தங்கள் கிளை களை துவக்க முடியும்.அதேநேரத்தில் இரட் டை திட்டம் மற்றும் கூட்டு டிகிரி படிப்புத் திட்டம் ஆகியவற்றை அயல்நாடு மற் றும் இந்தியக் கல்வி நிறுவ னங்கள் இடையே மேற் கொள்ள யுஜிசி ஒழுங்கு முறைகளை வரையறுக் கிறது.உத்தேசிக்கப்பட்டுள்ள இந்த ஒழுங்குமுறைகள் மற்றும் அயல்நாட்டு கல்வி நிறுவனங்களை இந்தியா வில் அனுமதிப்பது போன் றவை சனிக்கிழமை (ஜூன் 2) நடைபெறும் பல்கலைக் கழக மானியக்குழு கூட்டத் தில் விவாதிக்கப்படுகிறது.இந்த மாதம் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபல் இந் தியா-அமெரிக்கா நிலைப் பாடு பேச்சுவார்த்தைக்கு செல்கிறார். இந்தப்பயணத் திற்கு முன்னதாக கூட்டம் நடைபெறுகிறது. அமெரிக் கப் பயணத்தின் போது, இந்தியாவில் அயல்நாட்டு கல்வி நிறுவனங்களை அனு மதிப்பது தொடர்பாக, கபில்சிபல் வாஷிங்டன் பேச்சுவார்த்தையில் கூட்டு டிகிரி திட்டம் குறித்து அறிவிப்பு வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.அர்ஜூன் சிங் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருந்த போது, தன்னாட்சி பல்க லைக்கழகங்கள் மற்றும் தனியார் பல்கலைக்கழகங் கள் நிலையில், அயல்நாட்டு கல்வி நிறுவனங்களை இந் தியாவில் அனுமதிக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் அந்தத்திட்டம் கைவிடப்பட்டது.பல்கலைக்கழக மானி யக்குழு கூட்டம் ஜூலை 21ம் தேதிதான் நடைபெறு வதாக இருந்தது. அமைச்ச ரின் அமெரிக்கப் பயணத் தைக் கருத்தில் கொண்டு, ஜூன் 2ம் தேதியே கூட்டம் நடைபெறுகிறது.2010ம் ஆண்டு அயல் நாட்டு கல்வி நிறுவனங் களை அனுமதிக்க வந்த மசோதாவை, மாநிலங்கள வையில் இடதுசாரிக் கட்சி கள் மற்றும் பாஜக தலை மையிலான எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்து மசோதாவை நிறைவேற விடாமல் தடுத்தன.

Leave a Reply

You must be logged in to post a comment.